புதன், 19 டிசம்பர், 2012
என்ன தண்டனை தரப்போகிறோம் ?!
மாதம் 600 ரூபாய் போதும் ....இந்தியக் குடும்பம் வயிறார சாப்பிட ! சொன்னவர் டெல்லி காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சத் . அம்மணி தலையில் ஏதேனும் காயம் பட்டதால் "நடுவுல கொஞ்சம் பக்கத்த "காணலை போலிருக்கிறது ! இந்த அம்மையார் ஆளும் மாநிலத்தில் மக்கள் 600 ரூபாயில் குடும்பம் நடத்தினாலும் நடத்தலாம் ...ஆனால் எந்தக் குடும்பத்து பெண்ணிற்கும் கற்பு பாதுகாப்பு மட்டும் கிடைக்கவே கிடைக்காது ! இந்தியாவிலயே பெண்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லாத மாநிலம் வல்லரசு (!) இந்தியாவின் தலைநகரம் . ஒருவேளை ராஜபக்சேவின் ஆட்களை ,தமிழ் பெண்களை சூறை யாடியதுபோதும் டெல்லி பெண்களையும் ஒரு கை பார்க்கும் பயிற்சியை காங்கிரஸ் கேட்டு பெற்றிருக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியில் ,அதுவும் ஒரு பெண் முதல்வர் ஆட்சியில் . இருநாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த கற்பழிப்பு கொடூரம் உலகில் எங்காவது நடைப்பெற்றிருக்குமா எனபது கேள்விக்குறியே !
ஒரு பள்ளிப்பேருந்தில் குடித்துவிட்டு கும்மாளம் போட்டு வந்த ஆறு பேர் ,பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஒரு கல்லூரி மனைவியையும் அவர் காதலனையும் பார்த்து நிற்க ,அவர்களும் தங்களை போகும் வழியில் இறக்கி விட முடியுமா ?என்று கேட்க . அந்த காதல் கிளிகளை சுமந்து செல்கிறது அந்தப் பருந்து ! இரும்புத் தடியில் தாக்கப்படுகிறான் காதலன் !ஒருவர் மாறி ஒருவர் பேருந்தை ஓட்ட ....ஒருவர் மாறி ஒருவர் அந்த கல்லூரி மனைவியை சிதைத்து சின்னா பின்னம்மாக்குகின்றனர் ! இந்தக்கொடூரம் நடைபெறும் இரண்டு மணி நேரத்திற்கும் பேருந்து தலைநகரை வலம் வந்தபடியே இருக்கிறது .கறுப்புக் கண்ணாடியால் மூடப்பட்ட பேருந்தில் கதறும் அப்பெண்ணின் குரல் வெளியே கேட்கவில்லை . ஆறு மிருகங்களால் அடித்து துவைக்கப்பட்ட அப்பெண்ணும் அவன் காதலனும் ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர் ! இந்தக்கொடுமை நேற்று மக்களவையில் புயலைக்கிளப்ப ..வழக்கம் போல் சூடு சுரணை இன்றி கிடந்தது காங்கிரஸ் கட்சி . ஆறு பேரில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை தூக்கில் போடவேண்டும் என்று பலர் கோரிக்கை வைக்கின்றனர் . இந்நேரம் மருத்துவமனையில் பலியாகிவிட்டாளோ என்று கருதப்படும் அந்தத் தோழி இழந்ததை அவர்களை தூக்கில் போடுவதால் மீண்டும் தருவார்களா ? தூக்கு... தண்டனை இல்லை ...அது விடுதலை எனபது பலருக்கு புரிவது இல்லை .அவர்களை தண்டிப்பதற்கு முன் ..தலை நகரை கற்பழிப்பு நகரமாக மாற்றிய ஷீலா தீட்ஷத்துக்கும் ....காங்கிரஸ் தலைமைக்கும் நாம் என்ன தண்டனை தரப்போகிறோம் ?!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக