பொன் மாலை பொழுதில்
பொழுது விடிந்தது உனக்கு
இறவா புகழ் தமிழாய்
இரவே இல்லை உமக்கு
"தலை கனம் பிடித்தவன் "...
உனக்குப் பின்னால் பேசுவார்கள்
தலை முழுவதும் தமிழ் ...
கனம் இல்லாமல் எப்படி ?
பச்சையப்பன் கல்லூரி உன்னிடமும்
பைந்தமிழ் பாடிய காரணத்தால்
கணிதம் படிக்கப் போன எனக்கும்
தமிழ் மீது தீரா காதல் வந்தது
தமிழ் படிப்பவன் முட்டாள் ...
அப்படி என்றால் நீ யார் ?
மென் பொருள் வல்லுனரின்
ஒரு மாத சம்பளம் ....
உன் ஒரு பாடல் வருமானம் ...
தெரியுமா பெற்றோர்களுக்கு ?
பொறியியல் படித்தால் அவன் ...
பொறியில் சிக்கிய எலி
தமிழ்ப் படித்தால் அவன் ...
உன்னைப்போல் புலி
தமிழ் சோறு போடுமா ?...
கேட்கிறார்கள் முட்டாள்கள்
இந்த வைரத்துக்குப் பார் ...
தமிழே சோறு ஊட்டுகிறது
அறுபதுக்குள் ஆறு தேசிய விருது ...
அதுவா எங்களுக்குப் பெருமை ?
தமிழன்னை காலுக்கு இந்திய கொலுசுகள் ...
அதுதானே எங்களுக்குப் பெருமை
கள்ளிக்காட்டு இதிகாசம்
தண்ணீர் தேசம் படைத்தாய் ....
கவிஞன் என்பவன் கர்வம் மிக்கவன்
வாழ்ந்து வரலாறு படைத்தாய் ...
உடலுக்கு வேண்டுமானால் அறுபது
உன் சிந்தனைக்கு என்றுமே இருபது
நிலக்கரிக்குள் வைரம் என்பது நியதி...
உன் உருவமே சொல்லும் அந்தச் செய்தி !
பொழுது விடிந்தது உனக்கு
இறவா புகழ் தமிழாய்
இரவே இல்லை உமக்கு
"தலை கனம் பிடித்தவன் "...
உனக்குப் பின்னால் பேசுவார்கள்
தலை முழுவதும் தமிழ் ...
கனம் இல்லாமல் எப்படி ?
பச்சையப்பன் கல்லூரி உன்னிடமும்
பைந்தமிழ் பாடிய காரணத்தால்
கணிதம் படிக்கப் போன எனக்கும்
தமிழ் மீது தீரா காதல் வந்தது
தமிழ் படிப்பவன் முட்டாள் ...
அப்படி என்றால் நீ யார் ?
மென் பொருள் வல்லுனரின்
ஒரு மாத சம்பளம் ....
உன் ஒரு பாடல் வருமானம் ...
தெரியுமா பெற்றோர்களுக்கு ?
பொறியியல் படித்தால் அவன் ...
பொறியில் சிக்கிய எலி
தமிழ்ப் படித்தால் அவன் ...
உன்னைப்போல் புலி
தமிழ் சோறு போடுமா ?...
கேட்கிறார்கள் முட்டாள்கள்
இந்த வைரத்துக்குப் பார் ...
தமிழே சோறு ஊட்டுகிறது
அறுபதுக்குள் ஆறு தேசிய விருது ...
அதுவா எங்களுக்குப் பெருமை ?
தமிழன்னை காலுக்கு இந்திய கொலுசுகள் ...
அதுதானே எங்களுக்குப் பெருமை
கள்ளிக்காட்டு இதிகாசம்
தண்ணீர் தேசம் படைத்தாய் ....
கவிஞன் என்பவன் கர்வம் மிக்கவன்
வாழ்ந்து வரலாறு படைத்தாய் ...
உடலுக்கு வேண்டுமானால் அறுபது
உன் சிந்தனைக்கு என்றுமே இருபது
நிலக்கரிக்குள் வைரம் என்பது நியதி...
உன் உருவமே சொல்லும் அந்தச் செய்தி !







