thaagamsenguttuvan
செவ்வாய், 27 மே, 2014
நண்பா
என்னை
எடு...
இல்லை
இல்லை
என்னை...
புகைப்படத்திற்கு
போட்டிப்போடும்...
பனை
மரங்கள். ..
தமிழனின்
நெடுங்கரங்கள் !
நீயே
தயாரித்த
கடிகாரமா...?
நகர
மறுக்கின்றன
முட்கள்...
எப்போதும்
நம் மணி
12 ....!
மறுத்துக்கொண்டே
இருக்கிறாய்
என் காதலை...
போரளிகளுக்கு
காதல்
எதற்கு ?
மீண்டும்
மீண்டும்
சொல்கிறாய்...
நீயும்
பெண்தானே
என்றேன்...
இல்லை
நான்
போராளி என்றாய்..
எழுதி
வைத்துக்
கொள்...
காதல்
இல்லாதப்
போராளி....
விடுதலைப்
போரில்
தோற்பது உறுதி !
மீண்டும்
வலம் வருகின்றன
இரட்டை இலைகள்
சிற்றுந்துகளில்...
கறுப்புப்பணம்
கட்டுககட்டாக
சுற்றித்திரிகின்றன
தெருக்களில்...
தேர்தல்
ஆணையரும்
உயிரோடுதான்
இருக்கிறார்...
திருமணத்தின்
முன்நாளில்
ஒழுக்க சீலனாக மாறும்
மாப்பிள்ளைப் போல்...
தேர்தல் வரை
பரிசுத்தமாகிறது
இந்திய
ஜனநாயகம் !
நாளை
இரவு
முழுதும்
மொட்டை மாடியில்
நில்...
அமாவாசையை
பொய்யாக்கு !
கற்பிக்கப்படும்
இதயத்தின்
வடிவம்
போல்...
காதலும்
பொய்யாகிறது
பல
சமயங்களில் !
படம் உதவி- ஹேமலதா
தேர்தல்
முடிந்ததும்
திருமணம்
என்றாய்...
இப்போதும்
அதே
மவுனம்
காக்கிறாய்...
பிரதமிரடம்
புகார்
சொல்லவும்
முடியாது...
ஜெசோதாவுக்கே
பதவியேற்பில்
அழைப்பு
இல்லை !
நீ
அழகாய்
இருக்கிறாய்..
நான்
சைகையில்
சொன்னதை..
தியானத்திலுமா
விரலில்
காட்டுவாய் !
உனக்காக
எழுதுவதில்
உன்னைத்
தவிர
பலர்
விருப்பம்
இடுகிறார்கள்...
யாருக்கோ
எழுதுவதில்
நீ
மாய்ந்து
மாய்ந்து
விருப்பம்
இடுகிறாய்...
'முரண்'
வார்த்தை
வடிவத்தின்
பெண்
உருவம்
நீயே
தான் !
அவ்வையும் அதியமானும்
கள் உண்டுக்கொண்டே
இலக்கியம் பேசுவார்களாம்...
என்ன தோழியோ நீ ?
இன்றுவரை தொலைபேசியில்
கூட பேச மறுக்கிறாய் !
உனக்குப் புரியாதது
கடல் கடந்த நைஜீரிய
தேவதைகளுக்கு
எப்படிப் புரிந்தது ?
ஒரு நாளைக்கு
எத்தனை எத்தனை
காதல் கடிதங்கள்
அனுப்புகிறார்கள் !
மின்வெட்டு
மாநிலம்தானே
நிறம் ஒரு
பிரச்சனையா என்ன ?
அடித்தப்பிறகும்
மீண்டும் வருகிறது
தெரு நாய்...
திட்டியதற்கே
உண்ண மறுக்கிறது
வீட்டு நாய்....
உயர் சாதித் திமிர்
நாய்களிடமும்
உள்ளது !
உள் நாட்டுக்
கறுப்புப்
பண முதலைகளின்
பணத்தில் வென்றவர்...
வெளிநாட்டில்
உள்ள
இந்தியர்களின்
கறுப்புப் பணத்தை மீட்க...
விசாரணை
கமிஷன்
அமைத்துள்ளார் ...
மோடி மஸ்தானின்
முதல்
வித்தை !
கே(வ) ள்வி...
முடிவை உன்
விழி உளி
வசமே
விட்டுவிடுகிறேன்...
நான்
படிக்கல்லா ?
சிற்பமா ?
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)