சனி, 14 ஜூன், 2014

ஓரினச்சேர்க்கை
தமிழகத்திலும்
அதிகரிப்பு...


அதிர்ந்தேதான்
போனான்
நண்பன்


முகநூல் காதலி
ஆணென்று
தெரிந்தபோது !
மாவட்ட
ஆட்தித்தலைவர்களை
தொட்ர்ந்து
உருவாக்கும்
நகரத்தந்தை
சைதை துரைசாமி...


மாநகராட்சி
குப்பை
ஒப்பந்தக்காரர்களை
தேர்வு
செய்வதில்
தவறிழைக்கிறார் !
எங்கிருந்தோ
வந்த
மனைவி
வாழ்க்கை
தருகிறாள்...

என்றோ
சென்றக்
காதலி
கவிதை
தருகிறாள்...

வாழ்க்கை
நிஜம்

கவிதை
பொய் !
அரசியல்
கால்பந்து
அணிகளைக்கொண்ட
இந்தியா


கொஞ்சம்
கூட
வெட்கப்படுவதாக
தெரியவில்லை


உலகக்
கால்பந்து
திருவிழாவைப்
பார்த்து !
மார்பழகை
பாதுகாக்க
தாய்ப்பால்
தர
மறுப்பவள்....


மறக்காமல்
தருகிறாள்
தன்
கைபேசியை
விளையாட !
தன்
மகளின்
மஞ்சள்
நீராட்டு
விழாவுக்கு


விளம்பர
தட்டி
வைக்கும்
அரசியல்
தந்தை


பத்து
பாதுகாவலர்களை
போட்டுள்ளார்
அவளின்
பாதுகாப்புக்கு !
கொலுசுகளின்
இசைக்கு
மெட்டிகள்
பக்கவாத்தியம்
வாசிக்க
தொடங்கியப்
பிறகு...


மாற்றான்
தோட்டத்து
வண்டிசை
காதுகளில்
ரீங்காரமிட
மறுப்பது
நியாயம் தான் !
எச்சரிக்கிறேன்
மின்வெட்டுக்காக
முதல்வரை
விமர்சிப்பதை
உடனே
நிறுத்துங்கள்...


மாத
வரவு செலவில்
பத்து சதவீதத்தை
மிச்சப்படுத்திய
மகராசி
அவர் !
வான்வெளி
அலைகள்
இணைக்கும்
கைபேசி
உறவுகள்....


மேகங்கள்
போலவே
மிதந்துக்
கொண்டே
போய்விடுகின்றன் !
உனதையும்
சேர்த்து
பத்துப்படங்களை
அனுப்பினேன்
சிலந்தி
மீனிடம்...

இருமீன்
கண்ணுக்கு
சொந்தக்காரி
நீயேதான்
அதன்
தேர்வு !
கொடை
வழங்கினார்
பாரி வள்ளல்

நன்கொடை
பெறுகிறார்
பாரிவேந்தர்

புதிய தலைமுறையின்
பெற்றோர்கள்
வரிசையில்

நேர்பட
பேசு
நியாயத்தை !
எனக்குத்
தீவிரவாதிகளை
பிடிக்கும்

ஆனாலும்
உன்
மவுனம்....

பயங்கரவாதிகளிடமும்
இல்லாத
பேராயுதம் !
கண்ணகியின்
திருமணம்
எரித்தது
மதுரையை...


மாதவியின்
காதல்
உயிர்த்தது
புத்தத்தை !
சிங்கிப்பட்டி
ஜமீன்
காத்திருந்தார்

செல்லம்மா
தங்கை
சின்னப்பொண்ணுக்கு

கட்டிலறை
மணந்தது
காட்டு சந்தனத்தில்

கண்டாங்கிச்
சேலையில்
கட்டழகி

பேருக்குதான்
சின்னப்பொண்ணு,
பேரழகி

எல்லாம்
அவிழ்த்தப்
பிறகு

கடைசியாய்
அவிழ்த்தார்
மோதிரத்தை

அதில்
சிரித்தார்
பெருமாள்

கைகுட்டையால்
மூடினார்
கடவுளை

சிரித்துக்கொண்டே
கேட்டாள்
சின்னப்பொண்ணு

யோவ் கிழவா
உன் கடவுள்
கண்ண மூடிடிச்சா ?
இனி
எல்லாம்
அவன்
செயல்...


அடித்துக்
கொல்லு
சொன்ன
மருத்துவரை !
எனக்காக
கோவிலுக்கு
வந்ததற்கு
நன்றி...


நானும்
நன்றி
சொல்கிறேன்
புளி சாதத்திற்கு !
இழுத்து
இழுத்து
பார்கிறார்
பூட்டை...


கடவுளை
களவாடும்
திருடர்களை
எண்ணி !
எல்லோரையும்
காக்கும்
முருகன்
ஏசு
அல்லா..

ஏன்
ராஜபக்சேவுக்கு
மட்டும்
பயந்து
நடுங்குகிறார்கள் ?
நான்
சொல்லும்
போது
ச்சீ
என்கிறாய்..


கோபுரத்தை
பார்த்து
பக்திப்
பரவசத்துடன்
வணங்குகிறாய் ?
ஒருதலைக்
காதல்
எமன்கள்
ஊற்றுக்கின்றன
முகத்தில்...


தறுதலை
அரசும்
ஊற்றுகிறது
வண்டிவண்டியாய்
குடலில் !
நீயும்
என்னைப்
போல்
நாத்தீகம்
தான்....


அந்த
மூன்று
நாளைக்கு !
அகோரிகளுக்கு
திருமணம்
செய்து
வைத்தால்...


கங்கை
நறுமணம்
வீசப்
போகிறாள் !
ராஜபக்சே..
நவாஸ் ஷெரீப்...
தொடர் தாக்குதல்
எதிரொலி.....


விருந்து
செலவை
திருப்பிக்கொடு...


மோடி
அவசரக்
கடிதம் !
கங்கைக்கு
நாங்கள்
எந்த
விதத்தில்
குறைந்துவிட்டோம்..?


கூவம்
ஆறுகள்
மோடியிடம்
ஆவேசம் !
நட்புப்பட்டியலில்
எப்போதும்
தலைகாட்டிய
உன் படமும்
இப்போது
வருவதில்லை....


உன்னைப்போல் !
திருடனே
வராதபோதும்
தம்
இருப்பைப்பதிவு
செய்ய
குரைக்கும்
தெருநாய்
போல்...


எல்லைகளில்
அத்துமீறுகின்றன
நட்பு நாடுகள் !
சரியாத
முந்தானையை
சதா
சரி செய்யும்
உன்
நடிப்பில்....


எங்கள்
சிவாஜியே
தோற்கிறார் !
தங்கையின்
காலிடுக்கில்
வழியும்
ரத்தம்

அறிவிக்கிறது
ஆண் மிருகங்களுக்கு
எதிரான
யுத்தம்

டாஸ்மாக்கில்
விற்கப்படும்
ஒவ்வொரு
குவாட்டரும்

கேட்கிறது
ஒரு
பெண்ணைக்
கற்பழிக்க

எல்லாவற்றையும்
மலிவுவிலையில்
தரும்
நம் அம்மா

போதை
ஊட்டி
மலிவாக்கிவிட்டார்
தமிழனை

வரும் தேர்தலில்
234 தொகுதிகளையும்
எடுத்துக்கொள்ளுங்கள்


பதிலுக்கு
அத்தனை
டாஸ்மாக்கடைகளையும
கொளுத்திவிடுங்கள்


உரக்கச்
சொல்கிறோம்
புரட்சித் தலைவி
வாழ்க !

( படம்-பொள்ளாச்சியில் சீரழிக்கப்பட்டப் பள்ளிச் சிறுமி)

அனாதை
இல்லங்கள்
நடத்த

வெளிநாட்டு
நிதி வரும்
போது

அணு உலையால்
தமிழன்
அனாதையாவதை

தடுக்கும்
போராட்டத்திற்கு
நிதி வந்தால்

அதில்
தவறு
என்ன ?
அணுமின்
நிலையங்களுக்கு
கணக்கே
தேவையில்லை

சொல்பவன்
அதற்கு
எதிராக
போராடுபவனிடம்

கேட்கிறான்
வரவு
செலவு
கணக்கை.

இங்கிருந்து
போகும்
கறுப்புப்
பணத்தை

தடுக்க
வக்கில்லாத
வீரர்கள்
கேட்கிறார்கள்

அங்கிருந்து
வரும்
பணத்தின்
ஆதாரத்தை.

தேர்தலின்
போது பறந்த
பிரச்சார
விமானங்களுக்கு

எவன்
கேட்க
முடியும்
கணக்கை ?

இன்னும்
எத்தனை
கோடி
வேண்டுமண்ணா ?

அந்த
அணுஉலையை
மூடித்
தொலைய

நாங்கள்
தருகிறோம்
எங்கள்
கணக்கில் !
ரஷ்ய
நாட்டில்
இருந்து

இத்தாலிக்காரி
இறக்குமதி
செய்த

அணு
உலைக்கு
எதிராக

இந்தியப்
பணத்தைக்
கொண்டுதான்

போராட
வேண்டுமாம்
தமிழா !
மென்று சாப்பிடு
உடலுக்கு நல்லது

அறிவுரை சொன்ன
அறிவுஜீவி நீயே

சாப்பிட அமர்ந்தவுடன்
பேசியில் அழைக்கிறாய்

எங்கே மென்றேன்
அப்படியே விழுங்கினேன்

செரித்தது உணவில்லை
சிரித்துப்பேசிய நீ !
டாஸ்மாக்
கடைகள்
அதிகம்
ஆக ஆக


குழந்தையின்மை
மருத்துவமனைகளும்
பெருகி
வருகின்றன


குடிமகன்
குவளைக்குள்
படுத்து
உறங்க


அவன்
குழந்தை
சோதனைக்
குழாயில் தவழ்கிறது !
முரண்....

தமிழ்வழியில்
பயின்ற
மாணவன்
ஆட்சியர்
பணிக்குத்
தேர்வு


பெரும்பான்மை
பள்ளி
மாணவர்கள்
தமிழ்
பாடத்தில்
தோல்வி


உடனடித்
தேவை
அம்மா
தமிழ்
மொழிக்
கல்வி !
ஒன்றன்
பின்
ஒன்றாக
உயிர்
பெறுகின்றன ...


உன்
புடவையில்
உயிர்
துறந்தப்
பட்டுப்பூச்சிகள் !
கரையில்
நின்றாள்
போதும்...


கட்டிப்பிடித்து
முத்தமழை
பொழிவாள்
கடல் !
அம்மன்
கோவிலிலும்
ஆண்
அர்ச்சகரின்
ஆதிக்கம் !
குருப்
பெயர்ச்சியே
இல்லையாம்...


என்
வால்
நட்சத்திரத்திற்கு !
சிரிக்க
மறுப்பவர்கள்

சிரிப்பவரை
அடக்குபவர்கள்...


சிரிப்புப்
பயிற்சி
செய்கிறார்கள்
கடற்கரையில் !



வாய்ப்பயிற்சி
செய்கிறார்கள்
பெண்கள்...


நடைப்பயிற்சிப்
பெயரில் !
ஊரை
எரித்தக்
கண்ணகிக்கு
உருப்படி
ஒன்றுமில்லை


காதலித்த
மாதவி
பெற்றெடுத்தாள்
அழகிய
மணிமேகலை


வீரம்
வெறும்
வரலாறு,
அன்புதான்
வாழ்க்கை !