வியாழன், 29 மே, 2014

பொன் நதி

பொன் நிற
ஏரி

வெண்நிறப்
பறவைகள்

மின்னுகிற
தங்கக்குழம்பு

நிற்கிறதா
பறக்கிறதா

காதல்
தாழம்பூக்கள்

ஊடல்
பேரிறைச்சல்

கூடல்
பேரின்பம்

நீர்நிலை
வாழ்க்கை

உயிர்களுக்கு
உரிமை

பறவைகளுக்கு
தெரிவது

மனிதர்களுக்கு
புரிவதில்லை

அருவியில்
குளித்தவன்

அம்மா வாட்டர்
அருந்துகிறான் !


படம்-பொன்மணி

கனா காலம் !

ஓயாத
விளையாட்டு

விலகாத
அன்பு

பகிர்ந்துண்ணும்
பண்பு

பசிக்காத
வயிரு

பிடிக்காதப்
படிப்பு

கண்திறக்காத
நாய்குட்டி

பனை மர
கிளி கூண்டு

கில்லி
கிரிக்கெட்

மிட்டாய்
கடிகாரம்

சமத்துவ
கழிவறை

காக்கா
நீச்சல்

மாங்காய்
திருட்டு

ஓணான்
வேட்டை

பொன்வன்டு
ஜொலிப்பு

தண்ணீர் பாம்பு
கொலைகள்

திருவிழா
கடைகள்

மீண்டும்
வருமா

சிறுவர்
வயது ?

ஏங்கும்
மனது !

படம்-மணிகண்டன் அழகர்-கருப்பு கருணா