வியாழன், 6 டிசம்பர், 2012
thaagamsenguttuvan வியாழன், 6 டிசம்பர், 2012 தணியாத தாகம் .....4 வைகோவின் பெருந்தன்மை !
ஒன்றுமில்லை அண்ணன் .ஒரு சின்ன சிக்கல் .குற்றாலீஸ்வரன் அப்பா விழாவுக்கு தன் மகனை அழைத்து வர பயப்படுகிறார் !" நீங்கள் அவனை பாராட்டினால் முதல்வர் எந்த உதவியும் செய்ய மாட்டாராம் "!."அதைப் பற்றிக்கவலை இல்லை .திட்டமிட்டப்படி விழா நடக்கும் ,நீங்கள் குற்றாலீஸ்வரனை பாராட்டிப் பேசுங்கள் .விருதை நாங்கள் அந்தத் தம்பியின் வீட்டிற்க்கு அனுப்பிவிடுகிறோம் .அமுதா உறுதியாக வருகிறார் " என்றேன் .இரவு 11 மணிக்கு வைகோவின் வீட்டு வரவேற்பறையில் ,அவருக்காக ஈழத்தில் உயிர் தியாகம் செய்த சரத்தின் படத்தை பார்த்தபடியே வைகோ சொன்னார் ..."அந்த தந்தையின் பயம் நியாயமானது .நான் குற்றாலீஸ்வரனை பாராடிப்பேசுவதால் ஜெயலலிதா அவனுக்கு உதவிகள் செய்யாமல் போய்விடுவார் .நான் விழாவுக்கு வருவது முக்கியமில்லை குற்றாலலிங்கத்திற்கு நீங்கள் விழா நடத்துவதில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது .அவனை வாழ்த்திப் பேச ஏராளமான குறிப்புகளை தயாரித்து வைத்திருந்தேன் . அந்தத் தம்பிக்கும் அமுதாவிற்கும் என் வாழ்த்துக்களை சொல்லவும் " பெருந்தன்மையுடன் பேசினார் வைகோ .இல்லை நீங்கள் விழாவிற்கு வந்தால் போதும் .மற்றதை பற்றிக் கவலையில்லை என்று நான் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் வைகோ கேட்கவில்லை ."திருமணம் என்றால் மாப்பிள்ளை நான்தான் ...இறுதி சடங்கு என்றால் பிணம் நான்தான் "என்று மேடைக்கு ஆசைப்படும் தலைவர்கள் வாழும் காலத்தில் தன்னால் யாருக்கும் எந்த இழப்பும் நேரக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார் ."விழாவை சிறப்புடன் நடத்துங்கள் ஆனா ரூனாவிடம் என் வாழ்த்தை சொல்லுங்கள் தம்பி .அடுத்த தாகம் விழாவில் நான் தான் சிறப்பு விருந்தினர் . கை கூப்பி விட்டு படுக்கை அறைக்கு சென்றுவிட்டார் . "தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள்பவர்கே " சுவற்றில் எழுதி இருந்த குறளைப் பார்த்துக்கொண்டே கிளம்பினோம் ! அடுத்த நாள் காலை..... மீண்டும் மியூசிக் அகாடெமியில் இருந்து அழைப்பு ...வேறு என்ன ..குன்னக்குடியா ? புஷ்பவனமா ? .....தணியாத தாகம் .....தொடரும் ....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
