அது ஒரு
கனா காலம் ....!
வெகு
நாட்களுக்குப் பிறகு
நம் கல்லூரிக்கு
வந்தேன்
சிரித்துக்கொண்டே
வரவேற்கிறார்கள்
பச்சையப்ப வள்ளலும்
பேரறிஞரும்
வாழ்க்கைக்கே
சம்பந்தமில்லாத
கணித
வகுப்பறையும்
வாழ்நாள்
முழுதும்
தொடர்ந்து
வரும்
திருவள்ளுவர்
அரங்கமும்
திரும்பிப்பார்த்து
சிரிக்கின்றன
புல்தரையில்
புரண்ட காலங்களை
நினைவு கூறுகிறது
விளையாட்டுத் திடல்
மெட்ரோ ரயில்
முற்றிலும் சிதைத்துவிட்டது
எழிலான
கல்லூரி முகப்பை
நினைத்தாலே
வெட்காமாக இருக்கிறது
நடத்தியப்
போராட்டங்களை நினைத்தால்
எப்போதும் வரும்
தி .மு .க தலைவர்கள்
அவர்களை வரவேற்ற
நிமிடங்கள் நிழலாடுகிறது
காடுபோல்
வளர்ந்திருக்கும் கானகத்துள்
நான் மட்டும்
தனியே நடந்தேன்
காதைப் பிளக்கின்றன
கானாப் பாடல்கள்
புகை மண்டலத்தின்
நடுவே ஆடல்கள்
பத்திரிகை நடத்த
வேறொரு கல்லூரியில்
இருந்து நீ
சந்திக்க வருவாய்
நட்பா காதலா
தெரிந்துக்கொண்டே
தெரியாததுப் போல்
நடித்தோம்
அதோ பறக்கிறது
அந்த மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி ...
பிடிக்கச் சொல்லி
அடம்பிடிக்கும் நீ எங்கே ?
தீராத காதல் பேசிக்கொண்ட
விடுதி நோக்கி
செல்லும் வேளையில்
வேலியில் சிக்கியது உன் துப்பட்டா
அதைப்பக்குவமாக
எடுக்க சென்ற என்னை
தடுத்து
வேண்டுமென்றே கிழித்தாய்
எதற்காக என்றேன் ?
நம் நியாபகமாக
வேலியிலேயே
இருக்கட்டும் என்றாய்
வேலி
அப்படியே இருக்கிறது ...
துப்பட்டா துணியையும்
உன்னையும் காணவில்லை !
கனா காலம் ....!
வெகு
நாட்களுக்குப் பிறகு
நம் கல்லூரிக்கு
வந்தேன்
சிரித்துக்கொண்டே
வரவேற்கிறார்கள்
பச்சையப்ப வள்ளலும்
பேரறிஞரும்
வாழ்க்கைக்கே
சம்பந்தமில்லாத
கணித
வகுப்பறையும்
வாழ்நாள்
முழுதும்
தொடர்ந்து
வரும்
திருவள்ளுவர்
அரங்கமும்
திரும்பிப்பார்த்து
சிரிக்கின்றன
புல்தரையில்
புரண்ட காலங்களை
நினைவு கூறுகிறது
விளையாட்டுத் திடல்
மெட்ரோ ரயில்
முற்றிலும் சிதைத்துவிட்டது
எழிலான
கல்லூரி முகப்பை
நினைத்தாலே
வெட்காமாக இருக்கிறது
நடத்தியப்
போராட்டங்களை நினைத்தால்
எப்போதும் வரும்
தி .மு .க தலைவர்கள்
அவர்களை வரவேற்ற
நிமிடங்கள் நிழலாடுகிறது
காடுபோல்
வளர்ந்திருக்கும் கானகத்துள்
நான் மட்டும்
தனியே நடந்தேன்
காதைப் பிளக்கின்றன
கானாப் பாடல்கள்
புகை மண்டலத்தின்
நடுவே ஆடல்கள்
பத்திரிகை நடத்த
வேறொரு கல்லூரியில்
இருந்து நீ
சந்திக்க வருவாய்
நட்பா காதலா
தெரிந்துக்கொண்டே
தெரியாததுப் போல்
நடித்தோம்
அதோ பறக்கிறது
அந்த மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி ...
பிடிக்கச் சொல்லி
அடம்பிடிக்கும் நீ எங்கே ?
தீராத காதல் பேசிக்கொண்ட
விடுதி நோக்கி
செல்லும் வேளையில்
வேலியில் சிக்கியது உன் துப்பட்டா
அதைப்பக்குவமாக
எடுக்க சென்ற என்னை
தடுத்து
வேண்டுமென்றே கிழித்தாய்
எதற்காக என்றேன் ?
நம் நியாபகமாக
வேலியிலேயே
இருக்கட்டும் என்றாய்
வேலி
அப்படியே இருக்கிறது ...
துப்பட்டா துணியையும்
உன்னையும் காணவில்லை !





