புதன், 28 மே, 2014

நட்டநடு நிசியில்
தூங்கிக்கொண்டிருக்கும்
நம் குழந்தைகளைப்
பார்க்கும்போது...

இருள்
நம் இதயத்தையும்
சேர்த்தே
அழுத்துகிறது !
கடிகார
நேரத்தை
10 நிமிடங்கள்
அதிகம்
ஆக்குவதில் இருந்து
தொடங்குகிறது. ..

நம்மை
நாமே
ஏமாற்றிக்கொள்ளும்
வித்தை !
மோடி அலை
ஓய்ந்தது

மோடித் தீ
எரிகிறது

இம்முறை
கீழிருந்து மேல்

ராஜபக்சேவால்
தமிழகம்

பிரிவு 370 ஆல்
காஷ்மீர்

இந்துத்துவ
சீதையைக் காக்க

மோடி அனுமார்
வாலில்

ஆர்.எஸ்.எஸ்
நெருப்பு

தேன்நிலவிலேயே
விஷம் கலந்தால்

இந்தியா
இறந்து விடும் !
அழகிய
விடியலா ?

அந்திசாயும்
மாலையா ?

எனக்குத்
தெரியவில்லை

படம்
நான் எடுக்கவில்லை

கரு மேகம்
திரண்டால்

மயில்
நாட்டியமாடும்

இங்கு மேகமே
மயில் உருவில்

மனம் பறக்கிறது
வான் அருகில் !


படம்-மணிகண்டன் அழகர்

காதல்
கேட்கும
தோழி
மத்தியில். ..

காதல்
கதையை
கேட்கும்
தோழி. ...

நட்புக்கும்
காதலுக்குமான
இழை
வித்யாசம். ..

பாதுகாக்கும்
வரை
கோடி
சந்தோஷம் !

எத்தனை
வண்ணங்கள்
பூசி
உன்னை
மறைத்தாலும். ..

அப்பட்டமாய்
தெரிகிறாய்
நீ  !

ரோஜா !

ரோஜா வன
தேவதைகள்

தொட்டிச்செடியாய்
அடைக்கப்பட்டு

வீதி உலா
வருகின்றன

தள்ளு வண்டி
தண்டனைத் தந்து.

இன்னொரு
ரோஜா

அதைப் பார்த்து
ஏங்குகிறது

ஜன்னல்
சிறையிலிருந்து!

சட்டை !

அப்படியே
தொங்கிக்கொண்டு
 இருக்கிறது
 நீ
 தந்தச் சட்டை

நெடுநாட்களுக்குப் பிறகு
 என் கண்ணில்
 பட்டது
 இன்று...


அதன் பொத்தானில்
 சுற்றிக்கொண்டு
 உன் சிரிப்பை
 சிரிக்கிறது...


என்றோ சிக்கிய
 உன் நீண்ட
கருங் கூந்தல்
முடி ஒன்று !