புதன், 5 டிசம்பர், 2012
thaagamsenguttuvan: புஷ்பவனத்தை மியூசிக் அகாடெமி உள்ளே விட மாட்டோம் ! ...
thaagamsenguttuvan: புஷ்பவனத்தை மியூசிக் அகாடெமி உள்ளே விட மாட்டோம் ! ...: புஷ்பவனத்தை மியூசிக் அகாடெமி உள்ளே விட மாட்டோம் ! அவாள்கள் போர்க்கொடி !(தணியாத தாகம் ...தொடர் பகுதி -3)-தாகம் செங்குட்டுவன் . குற்றாலீஸ்வரன...
புஷ்பவனத்தை மியூசிக் அகாடெமி உள்ளே விட மாட்டோம் ! அவாள்கள் போர்க்கொடி !
புஷ்பவனத்தை மியூசிக் அகாடெமி உள்ளே விட மாட்டோம் ! அவாள்கள் போர்க்கொடி !(தணியாத தாகம் ...தொடர் பகுதி -3)-தாகம் செங்குட்டுவன் .
குற்றாலீஸ்வரனின் தந்தை இவ்வாறு கூறியவுடன் எனக்கு குழப்பம் .சுவரொட்டி ஒட்டியாகிவிட்டது .வைகோ பேராவலுடன் காத்திருக்கிறார் .ஆசிரியர் குழு நண்பர்கள் பிரேமும், பிரகாவும் "கூட்டம் வருவது வைகோவிற்கு தான் ,குற்றாலீஸ்வரனுக்கு இல்லை ,நாம் வைகோவை வைத்து நிகழ்ச்சி நடத்துவோம் .அவரிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம் .நமக்காக விமான சீடெல்லாம் எடுத்துவிட்டார் "என்றனர் . "வைகோ கலிங்கப்பட்டியில் இருந்து தாகம் நிகழ்ச்சிக்கு வருவதே குற்றாலீஸ்வரனை பாராட்டதான் ,மேடையில் அவன் இல்லையென்றால் அது நன்றாக இருக்காது .அவரிடமே உண்மையை சொல்லிவிடுவோம் "என்று நான் நண்பர்களை அழைத்துக்கொண்டு வைகோ வீட்டிற்கு கிளம்பினேன் .
இதற்கிடையில் மியூசிக் அகாடமி நிர்வாகியிடம் இருந்து அழைப்பு ."என்ன செங்குட்டுவன் ,குன்னக்குடி வைத்தியநாதன் கச்சேரி என்று பணம் கட்டிவிட்டு ஊரெல்லாம் புஷ்பவனம் கச்சேரி என்று போஸ்டர் ஒட்டி இருக்கு .வைகோ வருவது பற்றி நோ அப்ஜெக்சன் ...புஷ்பவனம் குப்புசாமியை எல்லாம் உள்ளே விடமாட்டோம் .ஜாக்கிரதை !"நிர்வாகி அய்யர் எச்சரிக்க எனக்கு தலை சுற்றியது .1993 ஆம் வருடம் இதே மியூசிக் அகாடெமியில் தாகம் இதழின் 2 ஆண்டு விழா கங்கை அமரன் கச்சேரியில் கலைக்கட்டியது .இன்றைய நித்யானந்தா புகழ் ரஞ்சிதாவை அமைதிப்படை படப்பிடிப்பில் இருந்து இயக்குனர் மணிவண்ணன் அனுப்பி இருந்தார் .அதுபோன்ற சினிமா கூத்துக்கு மியூசிக் அகாடெமி அனுமதிக்கும் ஆனால் புஷ்பவனம் கச்சேரிக்கு அனுமதி இல்லையாம் .கோபத்தை அடக்கிக்கொண்டு வைகோ வீட்டிற்க்கு கிளம்பினோம் .இரவு 11 மணிக்கு வைகோ வந்தார் ."என்ன இந்நேரத்துக்கு தம்பி ,ஏதேனும் பிரச்சனையா ?" எப்படி அவரிடம் செய்தியை சொல்வது ....தொடரும்
தணியாத தாகம்
THIRD
RATE AND FILTHY MAGAZINE THAAGAM -SAYS FRONTLINE ! கணித மேதை ,கல்பனா
சாவ்லா விருது பெற்ற ஐ .ஐ .டி பேராசிரியர் வசந்த கந்தசாமி அந்த
நிறுவனத்தில் படும் துன்பங்களை தாகம் தொடராக வெளியிட்டபோது இந்து ராம்
ஆசிரியராக இருந்த இந்து குழுமத்தின்
— Meena Kandasamy மற்றும் 11 பிறர் பேர்களுடன்
FRONTLINE
ஆங்கில இதழ் தாகத்தை மூன்றாம் தர இதழ் என்று புகழாரம் சூட்டியது ! தாகம்,
விடுதலைபுலிகள் நடத்தும் பத்திரிக்கை என்று தினமலர் செய்தி வெளியிட்டது !!
இன்னும் பல்வேறு சுவையான தகவல்களுடன் ...தணியாத தாகம் ...தாகம் தொடர் !
- Deepak Mani, Pagaltoons Pagalavan, எழில் வேந்தன் நாச்சியப்பன் மற்றும் வேறு 5 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
- Vaeyuru Tholibangan Mr. N. Ram has always displayed his genocidal propensity when dealing with the Cauvery issue and the Sri Lankan Tamils issue. One could hear the gurgling sound of gutters and poison flowing through every column of the Hindu. The only thing funny with t...மேலும் பார்க்கவும்
- Ma Umapathy NOT THIRD RATE MAGAZINE , IT MAY BE PROUD TO ACCEPT AS FOURTH RATED MAGAZINE , BEING IT IS RUN BY SOOTHRAAS THE FOURTH GRADE , BUT NOT BY "LANKA RATHNAAS" .. THE VIBEESHANAAS.
தணியாத தாகம் !-1
தாகம்
இதழ் 1992 ஆம் ஆண்டு அனைத்துக் கல்லூரி மாணவர் இதழாய் தொடங்கப்பட்டது
.வரும் தமிழ் புத்தாண்டு தை திருநாளில் தாகம் 22 ஆம் ஆண்டில் அடி எடுத்து
வைக்கிறது . நான் சந்தித்த தலைவர்கள் ,பத்திரிகையாளர்கள் ,மனித நேய
பண்பாளர்கள் மற்றும் பல நிகழ்வுகளை தாகம் மற்றும் முகநூளில் "தணியாத தாகம் " எழுத உள்ளேன்
நண்பர்களே .log on www .thaagam .com .முதல் தலைவர் வைகோ ! 1992 ஆம் ஆண்டு
அவர் அண்ணாநகர் டவர் எதிரில் உள்ள ஒய் பிளாக் வீட்டில் வசித்து வந்தார்
.இப்போது வைகோ இருப்பது எல் பிளாக் வீட்டில் . 1992 ஆம் ஆண்டு
— Karthik Mukundan மற்றும் 16 பிறர் பேர்களுடன்
வைகோ தி .மு .க. வில் இருந்து வெளியேற நிர்பந்தித்த ஆண்டு ."கருவின்
குற்றம்" கவிதையை நாஞ்சிலார் எழுத, அவரை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர் !
அது பற்றி தி .மு .க வினர் கருத்து கூற தயங்கிய நிலையில் வைகோ பகிரங்கமாக
பொதுக்கூட்டத்தில் ,நாஞ்சிலாரின் நீக்கத்தை மறு பரிசீலனை செய்ய சொன்னார் !
தி .மு .க தலைமை மீது வைகோ போட்ட முதல் குண்டு இது ! தாகம் இதழுக்காக முதல்
முறையாக 1992 ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் வைகோவின்
இல்ல வரவேற்பறையில் காத்திருந்தோம் .....அது ஒரு முன்னிரவு நேரம் .அவர்
வீட்டு மேல்தளத்திலிருந்து ஆங்கில பாடல் ஒலி நம் காதில் ஒலிக்கிறது ! அது
அப்போதைய லயோலா கல்லூரி மாணவர் துரை வையாபுரியின் அறையில் இருந்து
வந்துகொண்டு இருந்தது ! சமையல்காரர் எங்களுக்கு தேநீர் தர கதவை திறக்க
உள்ளே வைகோ யாரிடமோ ஆக்ரோஷமாக பேசிக்கொண்டு இருந்தார் ! கதவை சமையல்காரர்
சரியாக மூடாததால் வைகோவின் பேச்சு எங்களுக்கு தெளிவாக கேட்டது ! "எத்தனை
நாளைக்கு நான் இந்த கொடுமையை அனுபவிப்பது ....ஒரு பூனையை ஒரு அறையில்
பூட்டி விட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு அதை பிடிக்க சென்றால்
அது புலிபோல் நம் மீது பாய்ந்துவிடும் ! அந்த நிலையில் தான் நான் தி .மு
.க .வில் இருக்கிறேன் ! என்னால் இனியும் பொறுக்கமுடியாது "! வைகோவின் இந்த
எரிமலை வார்த்தைகளை கேட்ட நாங்கள் ஆடிப்போய்விட்டோம் ! சற்று நேரத்தில்
புன்னகை ததும்ப வெளியே வந்து என் கைகளை பற்றி என்னை வரவேற்றார் வைகோ !
....சந்திப்பு தொடரும் ....!-தாகம் செங்குட்டுவன்
- Damodaranprakash Prakash, Krishna Kumar, நந்தா நண்பேன்டா மற்றும் வேறு 24 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
- வளவன் வசந்தா சித்தார்த்தா · 57 mutual friendsஅருமை. பழைய வராலாற்றுப்பதிவாக அமையும். தொடர்ந்து எழுதுங்கள் தோழர்!!!
- மா.ச.மதி வாணன் · 15 mutual friendsஎத்தனை நாளைக்கு நான் இந்த கொடுமையை அனுபவிப்பது ....ஒரு பூனையை ஒரு அறையில் பூட்டி விட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு அதை பிடிக்க சென்றால் அது புலிபோல் நம் மீது பாய்ந்துவிடும் ! அந்த நிலையில் தான் நான் # நாஞ்சில் சம்பத் சொல்வது போல் விழுகிறது
- Thaagam Senguttuvan தமிழர்களுக்கு பிறந்தவனுக்கு தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு ! கலைஞர் அதை அறிவித்ததால் பலர் எதிர்கின்றனர் . தமிழ் இனம் தோன்றிய முதலே தை தான் தமிழ் புத்தாண்டு என்பது அனைவரும் அறிந்ததே . தை மாதம் அறுவடை மாதம் விவசாயி மகிழ்ச்சியாக இருக்கும் மாதம் .ஆட்சியில் உள்ளோர் எதை வேண்டுமானாலும் மாற்றட்டும் ....உண்மையை மாற்ற முடியாது ஆரியத் தமிழா !!

சுபவீயை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த கலைஞர் !
தேசிய பாதுகாப்பு
சட்டத்தில் கலைஞரால் கைதுசெய்யப்பட்ட பேராசிரியர் சுபவீயை அந்த தலைவர்
சைதாபேட்டை நீதிமன்றத்தில் காண வருகிறார் ! சுபவீயின் வலது கரமாக இருந்த
வவுனீயனும் நானும் அந்த தலைவரை
வரவேற்க
வாசலிலேய காத்திருந்தோம் . காரில் வருவார் என்று நாங்கள் நினைத்த தலைவர்
வந்து இறங்கியது 23c பேருந்தில்! தன்னந் தனியாக வந்த அந்த தலைவர் ...தொல்
.திருமாவளவன் ! சிறையில் சுபவீ ...அவர் மனைவியை வீட்டில் விசாரிக்க
வருகிறார்கள் காவல் துறை அதிகாரிகள் .அந்த அப்பாவி அக்காவிடம் ஒரு அதிகாரி
கேட்டார் ..."உங்கள் கணவர் LTTE யா ? " வசந்தா அக்கா சொன்னார் ..."நாங்கள்
நாட்டு கோட்டை செட்டி "!!! துருவி துருவி விசாரிக்க வந்த அதிகாரிகள்
விழுந்து விழுந்து சிரித்தனர் ! இன்னும் இன்னும் பல சம்பவங்கள் ...தணியாத தாகம் >>> தொடரில் !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









