வெள்ளி, 6 ஜூன், 2014

கண்ணா
உன்
காலில்
செருப்பு
இல்லையா ?


மத
வெறியர்களை
பதம்
பார்க்க
தா !


படம் -பொன்மணி

கதவையே
திறக்காதே
மனிதா

வாசல்
நுழைவுப்
போராட்டம்

நடத்திப்
பார்க்கும்
மரம் .


எத்தனை
முறை
வெட்டினாலும்


வீட்டிற்குள்
எட்டிப்பார்க்கும்
பசைக்கரம்  !
இந்த
விளக்கின்
கீழ்
நீ
அமர்ந்து
எழுதும்போதெல்லாம்...



உலகம்
அன்பெனும்
குடையின்
கீழ்
இயங்குவதை
உணர்ந்தெழுது !

உயர
 உயர
பறந்து செல்

விடுதலை
 விரக்தி
தரும் போது

திரும்பி
 வா
காத்திருப்பேன்.

சிறகுகள்
 பத்திரம்
திரும்பவும் செல்வாய்

பறப்பதும்
மறப்பதும்
பறவைக்கு மட்டுமல்ல

மனிதற்கும்
 சேர்த்தே
எழுதப்பட்ட இலக்கணம் !



படம்-சசிவர்ணன்.. ஈரோடு
உன்னைப்
போலவே...

அழகிய
சண்டை
மீன் !
கனவில்
ஏற்படும்
பயங்கர
விபத்து.....

நிஜத்தில்
நெஞ்சில்
அழுத்துகிறது
அதிர்ச்சி !
கோடி
வண்ணங்களை
ரசித்துப்
பருகு..

கறுப்பு
வெள்ளை
கண்கள்
வேண்டும் !



ஒளிஓவியம்-மணிகண்டன் அழகர்
அன்பெனும்
ஆயுதத்தை
காட்டியே...

கடைசிவரை
அடிமையாக்கினோம்
பெண் இனத்தை !



படம்-அம்புஜா சிமி
பெண்களும்
பாலியல்
வன்முறை
செய்கிறார்கள்...


தினம்தோறும்
காலையில்
கணவனின்
பர்சை !
செய்திகளை
அழிக்கச்
சொல்லி
அழுத்தியப்பிறகும்

மீண்டும்
உறுதி
செய்யச்
சொல்கிறது

நீ
தந்த
புதிய
கைப்பேசி....

நீ
மட்டும்
உடனே
அழித்துவிடுகிறாய்
நினைவுகளை !
திராட்சைப்
பந்தலில்
காத்திருக்கிறேன்
உனக்காக...

வாட்சேப்
செய்தி
இன்னுமா
கிடைக்கவில்லை..?

பழரசமா
இதழ்ரசமா ?
பட்டிமன்றத்திற்கு
நேரமாச்சு !

( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ... தொகுப்பிலிருந்து )
அதிகாலை
எழுந்து
மனைவி
கட்டித்தந்த
உணவுப்பெட்டியை
அலுவலக
ஊழியரிடம்
கொடுக்கின்ற
நேரத்தில்
வந்தது
அழைப்பு...



சாப்பிட்டாயா ?
மோடியின்
தாயாருக்கு
நவாஸ் ஷெரீப்
அனுப்பிய
வெள்ளைப்
புடவை...

இனியேனும்
குஜராத்தில்
எவரும்
கலவரத்தில்
இறக்கக்
கூடாது !
திரைப்படங்களில்
ஒரே
பாடலில்
வளர்ந்து விடும்
நாயகன்
போல்...

சாலைகளிலேயே
வளர்ந்துவிடுகின்றன
வல்லரசு
இந்தியாவின்
ஏழைக்
குழந்தைகள் !
எந்தப்
பல்கலைக்கழகத்தில்
பெற்றாய்...

காக்கவைக்கும்
கலைக்கானப்
பட்டத்தை ?