திங்கள், 19 மே, 2014

காவிகள்
பதவி ஏற்கும்
தினத்தில். ..

காந்தி சமாதியில்
ஒலிக்கப்போகும்
அபயக்குரல்...

ஹேராம் !
தொப்பையைக்
குறைக்க
ஓயாத
நடை. .

சிரிப்பாய்
சிரிக்கிறது
உழைப்பாளர்
சிலை !
ஆழிப்பேரலை கூட
அபிஷேகம்தான்
செய்ய முடிந்தது
வள்ளுவரை. ..

மோடிப் பேரலை
என்ன செய்துக்
கிழித்தது. ..

தமிழ்நாடெங்கும்
நின்றது
பெரியார் சிலை !