வியாழன், 7 ஜூலை, 2011

வேலியே பயிர்களை...



10 ஆண்டுகளுக்கு முன் ,சென்னை தீவுத்திடலில் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம். சென்னை இளைஞர்களின் நாட்டுப்பற்றை அறிந்துகொள்ள அங்கே ஆஜரானோம். நூற்றுக்கணக்கான வருங்கால ராணுவ வீரர்கள் பல்வேறு உடல் தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருன்தனர் .நமக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதால் தீவுத்திடலின் சுவர் ஏறி குதித்து இளைஞர்களை சந்தித்து உரையாடினோம். எனக்கு போலீசில் வேலை கிடைக்காதலால் இங்கு வந்தேன். லஞ்சம் கொடுக்கத் தேவை இல்லை அதனால் வந்தேன். எனக்கு பாகி°தானியர்களை சுட வேண்டும்...  இப்படிப் பல குரல்கள்.... ஆனால் பெரும்பாலான குரல்கள்... எங்களுக்கு வேறு வேலை கிடைக்கவில்லை அதனால் இங்கு வந்தோம் என்ற தங்களின் உண்மையான நாட்டுப்பற்றைப் பறைசாற்றின. திடீரென நம் தோளை ஒரு வலிமையான கரங்கள் அழுத்த,அதிர்ந்து திரும்பினேன்.
ஏ.கே 47 துப்பாக்கியுடன் ராணுவ வீரர் நின்றிருக்க ,சுற்றி இருந்த இளைஞர்கள் ஓடி விட, என்னைத் தர தர வென இழுத்து சென்றார் அந்த வீரர் .தேர்வு முகாமில் உள்ள உயர் அதுகாரி முன் தீவிரவாதியை போல் என்னை ஆஜர் படுத்தினர் ! நம் அடையாள அட்டையைப் பரிசோதித்துவிட்டு ...`ஓ பேப்பர் வாலா...' என்று அவர்களுக்குள் இந்தியில் பேசிக்கொண்டனர். என்னை நோக்கி கோபத்துடன் திரும்பினார் ராணுவ அதிகாரி.
ஐக ஐ ளநந லடிர யnடிவாநச வiஅந, ஐ றடைட ளுhடிடிவ லடிர என்று நம்மை நோக்கித் துப்பாக்கியை நீட்ட ... தலை தெறிக்க ஓடி வந்தேன்.
13 சிறுவன் தில்ஷன் இதே ராணுவ திடல் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மாங்காய் பறிக்க ராணுவ வீரரால்... சீ .... ராணுவ கோழையால் நாயை சுடுவதுபோல் கொல்லப்பட்டான். இந்தக் கொடூர சம்பவம் என்னைப் பத்தாண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்றது.
பதிரிக்கையாளராகிய நமக்கே துப்பாக்கி காட்டிய ராணுவம் தில்ஷனை சுட்டுக்கொன்றதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தில்ஷன் மதில் சுவர் இரும்பு கம்பி குத்தி இறந்து விட்டான் என்று ராணுவ தரப்பு பொய் சொன்னாலும், மருத்துவ அறிக்கை தில்ஷன் தலையில் குண்டு பாய்ந்துதான் இறந்தான் என்று உறுதி செய்துள்ளது. குற்றப்பிரிவு காவலர்களும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலைகாரப் பாவியை தூக்கில் இட வேண்டும் என்று தில்ஷனின் தாய் இறுதி ஊர்வலத்தில் கதறினார் .
இலங்கை ராணுவத்திடம் தினம் ஒரு மீனவரை பலி தந்து கொண்டிருக்கும்  நாம், இந்திய ராணுவத்திடமே நம் தமிழ் சிறுவனை பலி கொடுத்துள்ளோம். சுமார் இருபது அடி தொலைவில் இருந்துதான் தில்ஷன் சுடப்பட்டானாம். இந்திய ராணுவத்திற்குக் கூட தமிழர்களைப் பிடிப்பதில்லை போலிருக்கிறது!? மாங்காய் திருடினால் மரண தண்டனை ....கொலை செய்தால் வெறும் விசாரணை... உலகின் தலை சிறந்த ஜனநாயக நாடு இந்தியாதான்... அய்யோ பாவம்!
- சேரன்