ஞாயிறு, 18 மே, 2014

கடவுளுக்குத் தெரியுமா தாயுள்ளம் ?-அருண் ஷோரி.இந்த நூலைப் பற்றி முத்தரசன் மிக அழகாக இன்று புதுயுகத்தில் பேசினார். பத்திரிகையாளர் அருண்ஷோரி வெளி நாட்டில் இருந்த போது அவருக்கு ஆதித்யா என்ற மகன் பிறக்கிறான்.அவன் மூளை வளர்ச்சி அற்றக் குழந்தை. அவன் பிறக்கும் போது மருத்துவர்கள் செய்த தவறே குழந்தையின் இன் நிலைக்குக் காரணம் .ஆனால் அந்நாட்டு மருத்துவர்கள் ஆதித்யா வாழத்தகுதியற்றக் குழந்தை என்று சொன்ன போது ..அருண்ஷோரி இந்தியா வந்த விடுகிறார்.இந்திய கூட்டுக்குடும்ப முறையில் ஆதித்யாவைப் பார்த்துக்கொள்ளப்  பல தேவதைகள் கிடைக்கிறார்கள்.ஒருமுறை அருண்ஷோரிக்கு வேலை போய்விடுகிறது .எல்லோரும் சோகத்தில் இருந்தப்போது ஆதித்யா கைத்தட்டி சிரிக்கிறான்.அதுவே சூழ்நிலையை மாற்றி அனைவரையும் சிரிக்க வைக்கிறது.இன்று ஆதித்யாவுக்கு 36 வயது.அருண்ஷோரி இந்தப் புத்தகத்தில் எங்கேயும் கடவுள் இருக்கிறார் இல்லை என்று சொல்லவில்லை.அப்படியே கடவுள் இருந்தாலும் அவருக்கு மனிதர்களின் பிரச்சனைகளைப் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு பக்குவமோ அறிவோ இல்லை என்று சொல்கிறார்.உனக்கான்ப் பிரச்சனைக்குத் தீர்வு உன்னிடம் உள்ளது.எதுவானாலும் நீதான் சந்திக்க வேண்டும். கடவுள் காப்பாற்ற மாட்டார் என்று அருண் ஷோரி முடிக்கிறார்.கடவுளுக்குத் தெரியுமா தாயுள்ளம் ?

இன்று வெகுநேரம்
பார்த்திருப்பார்கள்...

பாலச்சந்திரன் படத்தை ..

காங்கிரஸ்காரர்கள் !
இன்னும்
 காயவில்லை
உன் கண்ணீர் ...

 என் முதுகில்
முள்ளாய்
குத்துகிறது !
நீ உண்ணும்
அழகையே
ரசித்துக்கொண்டிருந்தேன் ...

உனக்குப்
பசியில்லையா ?
என்றாய் ...

எப்படி
சொல்வது உன்னிடம் ...

உன் உணவுக்கானப்
பணம் மட்டுமே
என்னிடம்
உள்ளதென்று !

காற்று
உன் கூந்தலை
அலைக்கழிக்கும் என்பாதால்
விண்வெளியில்
வீடு கட்டுவேன் ...

நீரற்ற நிலத்தில்
நெருப்புன்னைத் தீண்டினால்
செங்குருதி இறைத்து
தீயை அனைப்பேன்....

மலர் பறிப்பில்
உன் விரல்
சேதமுற்றால்
நந்தவனத்தை
தீக்கிரையாக்குவேன் !
ஒரு நாள் கனவு!
__________________
கருப்பில் பிறந்தாய்
சிவப்பில் மலர்ந்தாய்

சூரியனாய் விரிந்தாய்
சூழ்ச்சியில் வீழ்ந்தாய்

நெருக்கடியில் மிளிர்ந்தாய்
ஒளித்திரையால் மறைந்தாய்

மஞ்சளில் மயங்கினாய்
நெஞ்சினுள் உறுத்தினாய்

ஈழத்தால் எழுந்தாய்
இத்தாலியால் சிதைந்தாய்

மீண்டு (ம்) கருப்பானாய்
நாங்கள் நெருப்பானோம்

நிரந்தரம் என்றாய்
நிலவினில் பறந்தோம்

மறுதினமே மஞ்சள் குளித்தாய்
அணு அணுவாய் வெட்டி சிதைத்தாய்

கருப்பை துறந்தாய்
வெறுப்பை சுமந்தாய்

கருப்பு எமக்கு பொது உடைமை
கலைஞரே ...உமக்கு தனி உடைமை

மீண்டும் எம்மை ஏமாற்றாதே ....
மிச்ச சுயமரியாதையை ...சிதைக்காதே !
-கழகக்கண்மணி
நான் டிராக்டர் பேசுகிறேன் .....!
-தாகம் செங்குட்டுவன்

பச்சைப் பசேல் வயல்களை உருவாகக் பாடுபட்டேன் அன்று
பதின் அடுக்கு மாடிகளை எழுப்ப உதவுகின்றேன் இன்று

களைப் பறித்த பெண்களின் கண்ணாடி வளையோசை கேட்டது அன்று
களைத்த முகத்தோடும் கலைந்த கூந்தலோடும் சித்தாளாய் பார்க்கிறேன் இன்று

மாடுகளின் சுமைகளை பகிர்ந்துகொள்ள படைத்தார்கள் என்னை
மாடுகள், பிளாஸ்டிக் பைகளை உண்ணச் சொல்கிறது சென்னை

விவசாயிகளின் நண்பனாய் இருந்தேன் என்பதே எனக்கான அடையாளம்
விசுவாசம் இல்லாத முதலாளிகளின் கையில் இங்கு எனது கடிவாளம்

கழனியெல்லாம் சுற்றிவருவேன் பின்தொடரும் கலப்பை
நகரெங்கும் பவனி வருகிறேன் காணவில்லை களிப்பை

மூட்டை மூட்டையாய் சுமப்பேன் நெல் மணிகளை
வீடு வீடாய் சுமந்து செல்கிறேன் குடி தண்ணீரை

குயில் பாட்டும் கும்மிப்பாட்டும் என்னை சுற்றி ரீங்காரமிடும்
குத்துப்பாட்டும் குமட்டல் இசையும் இங்கு எங்கும் ஓலமிடும்

கூழும் கஞ்சியும் என் மீது தெறிக்கும் சாப்பாட்டு வேளையில்
குவாட்டரும் பீரும் நாற்றம் அடிக்கிறது தினமும் மாலைவேளையில்

பத்து ரூபாய்க்கு அன்று என் வயிற்றை நிரப்பும் டீசல்
வெறும் பத்து லிட்டரில் இன்று என் உயிர்..... ஊசல !
கோடை விடுமுறை

பனஞ்சாலை

நுங்கு

பனம்பழம்

குடுக்கை வண்டி

பொன்வணடு

பச்சை நாற்று

மின் மினி பூச்சி

தேர் திருவிழா

அத்தை மகள்

மஞ்சள் தாவணி

வளையல் ஓசை

கொலுசு சத்தம்

ஏரி மீன்

கில்லி

நிலா முட்டை

இவை அத்தனையும் இழந்தது
இந்த ஒற்றை பேஸ்புக்குக்காகவா...?
நீரின்றி
 அமையாது உலகு..

நீயின்றி
 விடியாது பொழுது...

காபி!
வீட்டு சிறை
24 இல் விடுதலை. ..

உன் தந்தைக்காக
வாக்களிக்க வருவாய்...

விரலில் மை வைக்க
காத்திருக்கிறேன்.....
சமைல்காரன் சுவைத்தப்பிறகே
நமக்குப்பறிமாறப்படுகிறது.

கொத்தனார்
குடும்பம் நடத்தியப் பிறகே...
புது மனை புகுவிழா.

பறவைகள் சுவைத்தப்
பிறகே...
நமக்குப்பழங்கள்.

சூரியன் குடித்த மீதியே ..
நமக்கு குடிநீர்.

மீன்கள் குடித்த மீதியே...
கடல்.

எறும்புகள் சேமிப்புக்கு போக ...
எஞ்சியதே சர்க்கரை.

ஈக்கள் ருசி பார்தப்பிறகே..
இலை போடப் படுகிறது.

மரங்கள் அனுமதித்தப்பிறகே..
அனுப்படுகிறது காற்று.

நேற்றைய சுடுகாடு. ..
இன்றைய வீட்டு மனை.

இப்படி. ..எதுவுமே
 நமக்கு நமதாகாத போது..
நான் என்ற அகந்தை எதற்கு?
இறந்துப்  போன
 மாட்டின் கறியை
 திண்பதற்குத் தடைப்
போட்டவர்கள் தான். ..

அதன் ரத்தத்தின்
 பாதியானப் பாலை
 கறந்து கறந்து
டிகிரி காபி குடிக்கிறார்கள் !
மூடப்பட்ட
 அரசுப்பள்ளி
மீண்டும் திறப்பு. ..

வகுப்பெடுக்க
அல்ல ...

வாக்களிக்க !
ஜொலித்திடும் வைர இழை
அதைப் போல பொழிந்தது வானில் மழை...

மொட்டு மொட்டு மழையில் நனைந்தாள் முத்துப் பேழை
மோகத்தோடு நின்றான் பக்கத்தில் காலை ..

கண்களால் விரித்தான் வலை
காதலால் பேசினான் விலை...

கடைசியில் அவளோ அசைக்க மறுத்தாள் தலை
காரணம் அச்சப்படுவது தானே பெண்ணின் நிலை !

செடிகளுக்கு
தண்ணீர் ஊற்றினாயா ?

தொலைபேசியில்
கேட்கிறாள் மனைவி ...

காய்ந்திருக்கும்
கணவனைப் பற்றிக்
கவலைக்கொள்ளாமல் !
கூட்டம் கூட்டமாக
கூச்சலிட அனுப்புகிறோம் ...

அமைதியாக
வரிசையில் நின்று !
நம் முப்பாட்டன்
புதைந்த இடத்தில்
 பாதுகாப்பாய்
பொற்காசுகள்.....

நாம் புதைந்த இடத்தில்
புத்தம் புதிதாய்
கேரி பேக்குகள் !
உனக்கு சீதை
எனக்கு மாதவி

உனக்கு அம்மன் கோயில்
எனக்குப் பெரியார் திடல்

உனக்கு மோடி
எனக்கு 49 o

உனக்கு ரகுமான்
எனக்கு ராஜா

உனக்கு இந்திய தேசம்
எனக்கு தமிழ் தேசம்

உனக்கு ராஜிவ்
எனக்கு பிரபாகரன்

இத்தனை முரண்...இருந்தும்
நான் அரண் ...என்கிறாய் !
வெட்கத்தில் 
தலைகுனிந்துக்கொண்டிருக்கிறாய் 
என்றுதான் நினைத்தேன்... 

பக்கத்தில் வந்த போதுதான் 
தெரிந்தது 
கையில் கைபேசி !
உற்றுப்பார் இருட்டிலும்... உன் நிழலாக நானிருப்பேன்

உடுத்திப்பார் அந்த சேலையை.... நூலாக எனை நெய்திருப்பேன்

பாடிப்பார் பிடித்தப் பாடலை...ஓராயிரம் பார்வையிலே

ஆடிப்பார் படித்த பரதத்தை...வழிந்திடுவேன் உன் வியர்வையிலே


கிள்ளிப்பார் நீயே உனை...வலியால் நானன்றோ துடித்திடுவேன்

அள்ளிப்பார் நீரினை...கைகளில் நான்தானே தவழ்ந்திருப்பேன்

எட்டிப்பார் ஜன்னலில் ...எதிரிலேயே நின்றிருப்பேன்

தட்டிப்பார் கரங்களை ...அருகிலேயே அமர்ந்திருப்பேன் !

( தாகம் செங்குட்டுவன் -மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ... .தொகுப்பிலிருந்து 2005)

அஜித் பிறந்த நாள் செய்திகளை முகநூலில் பார்க்கும் போது காதல் கோட்டை நினைவுகள் நெஞ்சில் வீசுகிறது. தாகம் இதழின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவர் தயாரிப்பாளர் அண்ணன் சிவசக்தி பாண்டியன். அவரதுப் படங்களின் சிறப்புக்காட்சி தவறாமல் தாகத்திற்கு வழங்கப்படும்.அப்படி காதல் கோட்டையின் சிறப்புக்காட்சி சென்னை பிலிம் சேம்பரில்.இயக்குனர் அகத்தியன் , அண்ணன் சுபவீ அனைவரும் வந்துவிட்டனர்.அஜித் மட்டும் காணவில்லை .அன்று காலை 8 மணிக்குதான் அவரது வீட்டிற்கு சென்று அழைத்தேன்.'10 மணி விழாவுக்கு 8 மணிக்கு அழைப்பா ' ? என்று அவர் கேட்க.நீங்கள் இன்றுதானே சென்னைக்கு வந்தீர்கள் என்று சமாளிக்க ஒரு வழியா வருவதாக ஒப்புக்கொண்டார்.10 மணிக்கு காட்சி தொடங்கியும் அஜித் வராதது அவர் வருவதாக நம்பி டிக்கட் வாங்கியவர்களின் முறைப்புக்கு ஆளாக வேண்டி இருந்தது.படம் தொடங்கி அரைமணி நேரம் கழித்து நான் வெளியில் வந்தால் ...அஜித் அவர் கார் மீது சாய்ந்தபடி தம் கட்டிக் கொண்டு இருந்தார்.உள்ளே வாங்க என்று அழைத்தால்..'பாஸ் 50 முறை பாத்துட்டேன் .இடைவேளையில் வருகிறேன்' என்றார்.பிறகு இரண்டு வார்த்தை பேசிவிட்டு கிளம்பி விட்டார். கடைசி நேரத்தில் அழைத்தும் தலைகனம் இன்றி வந்த அவரை தாகம் குழு அன்புடன் அனுப்பி வைத்து.படத்தைப்பற்றி அகத்தியன் பேசினார்.அண்ணன் சுபவீ பேச்சுதான் சுவாரஸ்யம்.'வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்காய்' பாடலில் ஆடிய நடிகை புடவை அணிந்திருந்தாரா பூநூல் அணிந்திருந்தாரா ? என்று பேச அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.
எவனோ
வைத்த குண்டுக்கு
என் தமிழ்நாட்டு
முஸ்லிம் சகோதரன் தலைகுனிகரானே...

மதவெறியே ...
எங்கே இருக்கிறாய் ?
நான் வருகிறேன்
மனிதவெடிகுண்டாய் !
நான் தமிழ்த் தாய் பேசுகிறேன் ......!

இறந்தவர்களுக்கு மட்டுமே சிலை ...
இது தமிழ் மரபு

இன்னும் நான்
உயிரோடு இருக்கிறேன் !

என்னுடன் பிறந்த மொழிகள் எல்லாம்
மறைந்த நிலையில்

என் பத்துக் கோடி பிள்ளைகள்
என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள் .

என் மூத்த மகன் வள்ளுவனுக்கு
சிலை வைத்த போது மகிழ்ந்தேன்

என் இளைய மகன் பிரபாகரன்
ஆண்டபோது சிலிர்த்தேன்

எனக்கான நாட்டைக் கேட்ட
ஒரே குற்றத்திற்காக

லட்சக்கணக்கான என் பிள்ளைகளை
கொன்றபோது தமிழகம் வேடிக்கைப் பார்த்தது

நான் பார்வதி அம்மாளாய்
உயிர் பிச்சைகேட்டுவந்தபோது
விரட்டி அடிக்கப்பட்டேன்

நாடு இழந்து என் ஈழத்துப் பிள்ளைகள்
நாதி அற்றுத் தவிக்கிறார்கள்

சரி ,என் தாய் நாட்டிலாவது
நிம்மதி இருக்கிறதா ?

எனக்கு பிறந்த ஒரே காரணத்திற்காக
என் பிள்ளைகளுக்கு தண்ணீர் இல்லை

பாராண்ட என் இனம்
பஞ்சத்தில் தவிக்கிறது

பயிர் செய்ய நிலமில்லை
படுத்துறங்க இடம் இல்லை

அரசுப் பள்ளிகளில் மட்டுமே வாழ்ந்த நான்
அங்கிருந்தும் நேற்று துரத்தப்பட்டேன்

அகதியாய் அனாதையாய் உலகெங்கும்
உழலும் என் குழந்தைகள்

ஆனந்தமாய் அமைதியாய் வாழட்டும்
அதுவே எனக்கு மகிழ்ச்சி

குற்றுயிரும் குலை உயிருமாய் இருக்கும்
எனக்கு முதலில் தேவை முதலுதவி

கல்விச்சாலைகளிலும் கணினியிலும்
என்னை அமரவைத்து அழகு பார்

என்னை கற்றவனுக்கே முதல் பதவி
என்னை சுமப்பவனுக்கே முதல் மரியாதை

என் உழவன் மகனுக்கே இங்கு உயிர் இல்லாத போது
உயிரோடு இருக்கும் எனக்கு சிலை எதற்கு ?

என் மகள்களின் தாலிகள் எல்லாம் சாராயக்கடையில்
என் மகன்களின் உடல்கள் எல்லாம் சாக்கடையில்

என் பிள்ளை அன்று கங்கை கண்டான் கடாரம் கொண்டான்
அய்யகோ ....இன்று எப்போதும் போதை கொண்டான்

அந்தப் பணத்திலா எனக்கு சிலை ?
அதற்கு பதில் என்னை செய்து விடு ..கொலை !!

எனக்குப் பிறகு பிறந்த சீன மொழி உலகை ஆளுகிறாள்
ஜப்பான் ,கொரியா ,ஜெர்மனி ,இந்தி ஆட்டம் போடுகிறாள்

ஆனால் ..அனைவருக்கும் மூத்தவள்
அனாதையாய் அழுகிறேன்

என்னை சிரிக்க வைக்க இங்கு யாரும் இல்லை
சிலையாக்க மட்டும் துடிப்பதேன் ?

"கல்லுக்கும் மண்ணுக்கும் முன் தோன்றியவள் "
கைதட்டல் பெற பொய் சொன்னவர்கள் ...
என்னை நிஜக் கல்லாகவே மாற்றப்போவது
நியாயம்தானா ?

இத்தனைக்கும் பிறகும் என்னை
சிலையாக்கத் துடிப்பவர்களுக்கு
ஓர் வேண்டுகோள் ....

என்னை மதுரையில் நிற்கவைக்க வேண்டாம்
முள்ளிவாய்க்காலில் புதைத்து விடுங்கள் ...
விதைகளோடு விருட்சமாய் வருவேன் ...!
வெடிகுண்டு
 வைத்தவனை
தேடுகிறாய் சரி....

என்னை
 வெடிக்க வைத்தவர்களுக்கு
என்ன தண்டனை ?
கடும் கோபத்தில்
என்னை முறைக்கப்போகிறாய்
என்றுதான் நினைத்தேன்.

இன்ப அதிர்ச்சியாய் சிரித்தாய்...
இன்றைய மழைப்போல !
ஆடிக்கு
தாய் வீடு போன
மணமகளாய்
திரும்பினாள்
மழை...

ஓரே இரவில்
வெப்பம் தணிந்தான்
சென்னை
 மாப்பிள்ளை !
அனைத்தையும
 முற்றிலும் மூடிய நீ...
இதயத்தை இப்படியா
 திறந்து 
வைத்திருப்பாய் ? 

அலை பாயும் 
விழிகளால்
அப்பட்டமாய் 
சிக்கினாய் !
கருவில் சுமக்கும் குழந்தையாய்
கற்பனையை சுமக்கும் கவிஞன் ..

நரம்புகளை இசை யாழாக்கும்
இசையமைப்பாளன் ...

குரலைத் தேனாக்கும்
 பாடகர்கள் இருந்தும் ...

வெட்கமே இல்லாமல்
 சொல்கிறோம்

வாயசைக்கும்
நடிகனின்  பாடலென்று !
துல்லியமாக சொல்லும்
என்றுதான் அனுப்புகிறாய்
என் பணத்தில் ராக்கட்டை..

நீ சொன்ன
மழை ஜோசியம்
பலிப்பதாய் தெரியவில்லை. .

குற்றம் இழைத்தது இஸ்ரோவா?
ஆசீர்வதித்த ஏழுமலையானா?
எதன் மீது விழுந்தாலும்
அதுவாகும் மழை....

உன் இதழ் மீது மட்டும்
தேனாய் மாறுவது எப்படி ?
போதும் போதும்
பொழிவதை நிறுத்து...

கூவத்தில் விழுந்து
தற்கொலை செய்ய முடியாது.

குளம் ..
தலைவரின் கூத்தியா வீடு

ஏரி. ..
அவர் மச்சானின் லே-அவுட்

வீணாகி போவதை விட
வானோடு இருப்போம் !

-மழைத்துளிகள்.
உச்சநீதிமன்றமே ...
ஏனிந்த ஓரவஞ்சனை

ஜல்லிக்கட்டு காளைப்போல்
எங்களையும் காப்பாற்று


-பிச்சை எடுக்கும் யானைகள்
பந்தைய குதிரைகள் !
மக்களைப் பாதுகாக்கும்
போராளிகளை
 இழிவுப்படுத்தாதே ...

முகத்தை மூடிப்
பறக்கும்
இரு சக்கர வாகனப்
பெண்ணே !
மயில் தோகைதானே
எல்லோரும்
 வைத்திருப்பார்கள் ...

உன் நூலில்
மட்டும் ஏன்
காக்கைச் சிறகு
என்றேன் ...

என் வீட்டிற்கு
வரும் பறவைதான்
எனக்குப் பிடிக்கும்
என்றாள் !
கொலுசு ஓசைகளை
மறக்கடிக்கச் செய்துவிட்டன ..

ரிங்டோன் எரிச்சல்கள் !
ஓயாமல்
 அப்பா சொன்னபோது
கேட்காத
 நான் தான்...

ஒற்றை
வெள்ளை முடிக்கு பயந்து
தினம்தோறும்
 சவரம் செய்கிறேன் !
குடித்தப் பிறகுதான்
தெரிந்தது...

அது கும்பகோணம்
அல்ல ...

கும்பக்கர்ணன் காபி
என்று !
இதழ்களைக் காட்ட
அத்தனை பயம் ...

இதயத்தைத் திருட வந்த
முகமூடி கொல்லைக்காரிக்கு !
என் இதயத்தை
சுமந்து வருகிறது
மயில் பறவை ...

உன் முந்தானையில்
ஏந்திக்கொள்
உயிர் உறவை !
தமிழக மக்களின் தீர்ப்பு மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது .எப்போதும் பெரியக் கூட்டணி அமைக்கும் கடசிகளுக்கே மிகப்பெரிய வெற்றியைத் தரும் மக்கள் இம்முறை 5 முனைப் போட்டி இருந்தும் அ.தி.மு.க வுக்கு இமாலய வெற்றியை அளித்திருக்கிறார்கள்.தனது ஆட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்று இது என்கிறார் முதல்வர்.உண்மையிலேயே அத்தகைய சிறப்பான ஆட்சி நடைபெறுகிறதா ? கொலை, கொள்ளை,மின்வெட்டு, ஊழல், கவுன்சிலர் அத்துமீறல், மோசமான சாலை வசதி,காவல் துறை பாராமுகம், மாநகராட்சி செயலற்றத் தன்மை ..இப்படி பல குறைகள்.அம்மாவுக்கு பயந்து அமைச்சர்கள் அடங்கி இருப்பதை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லாத நிலையில் மக்கள் அ.தி.மு.க வை அதுவும் இந்த மோடியின் அசுர வெற்றியில் ஆதரித்தது ஏன்? தி.மு.க காங் மேலுள்ள வெறுப்பா ? எது அ.தி.மு.க வை வெற்றிப் பெறச்செய்தது ? வாக்குப் பிரிந்ததால் வெற்றி என்றால் ..சொற்ப வாக்கில் தானே வென்றிருக்க வேண்டும். எதிர் கட்சிகள் சொல்வது போல் இது பணத்தால் வந்த வெற்றியா ?

எல்லோர் சேலையை
அவிழ்கும் கண்ணன்...

பாஞ்சாலிக்கு மட்டும்
ஏன் தந்தான் !
பார்த்துப் பார்த்து
 அலங்காரம்
செய்த பின்பும் ...

பல வாகனங்களின்
 கண்ணாடிகளை
 தேடுகின்றன  கண்கள் !

இன்று சனிக்கிழமை.. !

-தாகம் செங்குட்டுவன்
________________________________________

மாலை 5 மணிக்கெல்லாம்
மக்கள் கூட்டம் கூட்டமாக

வாரக்கூலி வகை வகையான
வண்ணங்களில் வயிற்றுக்குள்

ரத்தம் முழுவதும் அமிலமாக மாறும் போது
ரதத்தின் ரத்தத்திற்கு நன்றி நவிலும் தலைவி



தேர்தல் வெற்றிப் பற்றிய விவாதங்கள்
தோல்விப் பற்றிய ஓயாத அலசல்கள்

அரசேத்  தோண்டிய இந்த ஆழ்துளை கிணற்றில
அடுக்கடுக்காக விழும் குடி மகன்கள்


வாக்கு சதவீதத்தை பற்றி சிந்திக்கும் எவனும்
வாழ்க்கை சிதைவதைப் பற்றி சிந்திக்கவில்லை

முகத்தில் திராவகம் வீசினால் தண்டனை ...
வயிற்றில் ஊற்றிக் கொல்லும் அரசுக்கு ?
இன்று ...மே 18
தமிழர் படுகொலை 5 ஆம் ஆண்டு ...

நக்கீரன் தொகுப்பில் வெளிவந்த
எனதுக் கவிதை ....

சரித்திர சந்திரன் !

-தாகம் செங்குட்டுவன்
______________________
ஆயுதம் செய்யாததை -உன்
அப்பாவி மௌனம் சாதித்தது

காதலர் தினம் கொண்டாடியவர்களை
களத்திற்கு அழைத்து வந்தவன் நீ

கப்பல் படை ,காலாட் படை ,விமானப்படை
இருந்தும் தோற்றோம்

மழலை சிரிப்பு ,ஏக்கப்பார்வை ,அன்பு முகம்
கண்டுதானே வீரம் பெற்றோம்

தண்ணீர் இன்றி தவிக்கும் எங்களுக்கு
வீரம் வந்ததே இல்லை

செந்நீர் குளத்தில் நீங்கள் மிதந்தபோதும்
எங்களுக்கு ஈரம் மட்டுமே வந்தது

எப்போதும் அரசியல் ராஜா -ராணிக்கு
சாமரம் வீசும் எம் தமிழகம்

முதல்முறையாக எங்கள் ராஜாவின்
ரோஜாவை ஏந்தியது தமிழ் அகம்

சிறுவர்களை கொண்டப் படை
என்பது பலரின் குற்றச்சாட்டு

தன் சிறு குழந்தையையும் இனத்திற்கு
தந்தானே ....
எங்கேப் பாராட்டு ?

உண்மையை சொல்... நீ உண்பது
தின்பண்டமா ...சயனைடு குப்பியா ?

அந்த ஆத்திரத்தில்தான் உன்னை
சல்லடை ஆக்கினானா சிங்களன் ?

ஆயுதத்தால் வெல்லமுடியாத ஆங்கிலேயனை
அகிம்சை காந்தி விரட்டினார் இங்கு

அறவழியும் ,ஆயுதமும் பெறமுடியாததை
" குழந்தை காந்தி" தரப்போகிறாய் அங்கு

ஈழத் தந்தை செல்வா ,ஈழத் தலைவர் பிரபாகரன்
ஈழ மகன் பாலச்சந்திரன்

காந்தள் மலர் ,புலிக்கொடி ,பனைமரம்
அவை போல் இனி நீ நிரந்தரம்

எந்த நாட்டு விடுதலையும் பாலகனால்
கிடைத்ததாக வரலாறு இல்லை

தமிழ் ஈழம் உன்னால் கிடைத்ததாக
படைக்க போகிறோம் புது வரலாறு

சிலுவையில் ஏசுபிரான் அறையப்பட்டப்
பிறகுதான் வென்றது யூத இனம்

சிறுவன் நீ சிதைக்கப்பட்ட பிறகுதான்
சீறிப்பாய்கிறது எம் தமிழினம்

ஒன்று சேராத நண்டினம் ...அவப்பெயர்
நீக்கியவன் ...பாலச்சந்திரன்

தலைவர்களே இல்லாத ஒருப் புரட்சி ...

தமிழகத்தில் தந்த சரித்திரன் !
மூன்றாண்டு சாதனைகள் பக்கம் பக்கமாக சிரிக்கின்றன நாளேடுகளில். விடப்பட்ட வேதனைகள் நிறைய....

சென்னையை அமெரிக்கா போல் மாற்றப் போவதாக முதல்வர் அறிவித்து இரண்டாண்டுகள் ஆகிறது .அமெரிக்கா வேண்டாம் குறைந்தப்பட்சம் சென்னை ஒரு சுகாதாரமான
நகரமாக மாறுமா என்பதே நம் கேள்வி. சென்னையின் மய்யப் பகுதிகளில் உள்ள சேரி மக்களை இரண்டாம் தர மக்களாகவே அனைத்து அரசுகளும் பார்கின்றன.மாநகராட்சி முற்றிலும் புறக்கணித்த பகுதிகள்தான் சேரி மக்கள், வாக்களிக்கும் ஒரு இயந்திரமாக , டாஸ்மாக் வாடிக்கையாளர்களாக , காவல்துறையின் வழக்கு எலிகளாக மட்டுமே பார்க்ப்படுகின்றனர்.கட்சி ரவுடிகளின் அராஜகம்...அரசின் அலட்சியம் என இம்மக்கள் அகதிகள் போல் தான் வாழ்கின்றனர்.இவர்களை உயர்த்தாமல் அரசின் சாதனைப் பட்டியல் என்பது சப்பைக்கட்டு.

பல ஆண்டுகளாக பதியாத எப்.ஐ.ஆர், மிகமிக மோசமான சாலைகள், எல்லை மீறும் சங்கிலிப் பறிப்பு, கொலை, கொள்ளை , நிறுத்தப்பட்டப் பால வேலைகளால் மக்களைப் பைத்தியமாக்கும் போக்குவரத்து நெரிசல், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, மின்வெட்டு பொய் வாக்குறுதிகள் என வேதனைப் பட்டியல்கள் நீள்கினறன... அடுத்தாண்டு சாதனைப் பட்டியலில் இவை சேருமா ?
போராளியின்
கடைசி
ஆயுதம் ...

பல் !
நமக்காக சுமக்கின்றன
கால்நடைகள்...

அதற்காக சுமக்கின்றனர்
கிராம தேவதைகள் !

படம் உதவி-பொன் மணி
நமக்காக சுமக்கின்றன கால்நடைகள்... அதற்காக சுமக்கின்றனர் கிராம தேவதைகள் ! படம் உதவி-பொன் மணி
கூண்டுக்கிளிக்கு நாள்தோறும் உணவு .... மனைவி மீது அளவற்ற அன்பு !