நேற்று அறிவுமதி அண்ணன். இன்று சுபவீ அண்ணன். அண்ணனுடன் நெருங்கிய பழக்கம் உண்டு .ஆனால் கிண்டல் எல்லாம் செய்தது இல்லை. ஒரு பேராசிரியருக்கும் மாணவனுக்குமான உறவு.இதில் பதிவு செய்ய முடியாத உதவி கூட அண்ணன் எனக்கு செய்திருக்கிறார்.தமிழ்ச்சான்றோர் பேரவை, தந்தைப் பெரியார் தமிழிசை மன்றம், நந்தன் இதழ் இந்த மூன்று களத்திலும் அண்ணனுடன் பணியாற்றியக் காலம் பொற்காலம்.பெரியார், பிரபாகரன், பகுத்தறிவு, தமிழ் உணர்வு ...இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் இவரிடம் கற்றப்பாடங்களை.
பல நேரங்களில் அண்ணணின் இருசக்கர வாகனத்தின் ஓட்டுனராக நான் பணியாற்றியதை இன்றளவிலும் பெருமையாக கருதுகிறேன்.அவருடைய பிள்ளைகள் லெனின், பாரதி, இந்திரா ஆகியோருடன் அவர் நட்புடன் பழகும் விதம் பார்பதற்கே கண்கோடி வேண்டும். வாங்க , போங்க என்றுதான் அவர்களுடன் பேசுவார்.அதில் இருவர் காதல் திருமணம். அந்தக் காதலை மகிழ்ச்சியுடன் ஏற்று அவர்களுக்கு மணமுடித்து வைத்த மிகச்சிறந்த தந்தை அவர்.
அவர் தம்பிகள் நாங்கள் காதலித்தால் கூட தய்ககமின்றி அது உண்மையான காதலாக இருப்பின் வந்துப் பெண்கேட்கக்கூடத் தயங்க மாட்டார்.ஒருவேளை அது நிறைவேறாதப் பட்சத்தில் நாம் துவண்டு விடக்கூடாது என்று காதல் குறித்து வகுப்பெடுப்பார்.
நந்தனில் கொடுக்கும் சம்பளத்தை நான் ஒரே நாளில் செலவு செய்து விடுவேன்.எனக்கு அதை நாள் சம்பளமாக மாற்றிவிட்டார் !
ஒருமுறை புலிகளை ஆதரித்து அண்ணன் பேச ..அவரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து விட்டார்கள் .காவல் துறை வந்து அண்ணன் வீட்டில் விசாரித்தது.அக்கா வசந்தாவிடம் அதிகாரி கேட்டார்...உங்கள் கணவர் எல்.டி.டி.யா ? அதற்கு அக்கா சொன்ன பதில்...இல்லை இல்லை. ..நாங்கள் நாட்டுக்கோட்டைப் பக்கம் ...என்று....! சிரிப்பை அடக்கிக்கொண்டு கிளம்பினார் அதிகார்.அப்படி ஒரு அப்பாவி வசந்தா அக்கா...
தணியாத தாகம் தொடரும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக