வியாழன், 5 ஜூன், 2014

என் காதல்காரி....!

-தாகம் செங்குட்டுவன்



பச்சை வண்ண
சேலைக்காரி
வெள்ளைச் சிரிப்பு
அருவிக்காரி

கொங்கை பெருத்த
மலைக்காரி
மங்கையை  வெல்லும்
கலைக்காரி

விண்ணை  முட்டும்
வனக்காரி
கண்ணை மூடும்
வாசக்காரி

மடியில் தாலாட்டும்
பாசக்காரி
மொழியில் சீராட்டும்
நேசக்காரி

அள்ளி அள்ளித் தரும்
வள்ளல்காரி
துள்ளி துள்ளி எழும்
துள்ளல்காரி


தலைகுனிந்துப் பணியும்
வரைப்படக்காரி
தமிழ் வீரப்புலிகளின்
உறைவிடக்காரி

வயல்களைக்கொண்ட
உழவுக்காரி
கயல்களைக்கொண்ட
திரைக்கடல்காரி

எல்லைகளை இழந்த
அப்பாவிக்காரி
தொல்லைகளை சுமக்கும்
தியாகக்காரி

தலைகனம் இல்லா
காதல்காரி
தலைகோதி விடும்
தாய்மைக்காரி

பத்துக்கோடி உறவு
சொந்தக்காரி
பல்லாயிரமாண்டு
பந்தக்காரி



மேடு பள்ளம் இல்லா
சமவெளிக்காரி
கேடு உள்ளம் இல்லா
சமத்துவக்காரி


இலக்கியப் புதையல்
செல்வக்காரி
தண்ணீர் கேட்கும்
பிச்சைக்காரி


சிறையில் தவிக்கும்
தமிழ்த் தேசக்காரி
இந்திய வர்ணம்
பூசிய வேஷக்காரி





எப்படி போற்றுவேன்
உன்னைக் கண்ணே
உலக அழகியும்
உனக்குப் பின்னே

உன்னில் பிறந்தேன்
என் உயிர்ப்  பெண்ணே
உன்னில் புதைந்தேன்
என் தமிழ் மண்ணே !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக