வியாழன், 19 ஜூன், 2014


சுபவீ ..அறிவுமதி...மணிவண்ணன். . தொடர்ந்து ..இன்று என் அண்ணன் நக்கீரன் கோபால்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரிலேயே இருந்ததனால் நக்கீரன் அலுவலகம் என்னை ஈர்த்ததில் ஆச்சர்யம் இல்லை.

1992 இல் தாகம் அனைத்துக்கல்லூரி மாணவர் இதழாய் தொடங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை என்னுடைய அத்தனை இன்ப துன்பங்களில பங்கேற்றவர் என் அண்ணன் நக்கீரன் கோபால்.

என் திருமணத்திற்கு அண்ணன் வருவதாக இருந்தது. ஆனால் அன்நேரத்தில் அவர் வீரப்பனிடமிருந்து நடிகர் ராஜ்குமாரை மீட்கும் பணியில் இருந்ததால் அவரால் வர இயலவில்லை. அதன் பிறகு என் இல்லத்திற்கே வந்து வெகுநேரம் இருந்தது மறக்க முடியாத நிகழ்ச்சி.

தாகம் ஒரு மாத இதழ் என்று எண்ணாமல் " ஆட்டோ சங்கர் முதல் வீரப்பன் வரை " தொடரை சுமார் ஓராண்டு எழுதியது மறக்கமுடியாத நிகழ்வு.
ஐ.ஐ.டி கணித பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்கள் அன்நிறுவனத்தால் பல துன்பங்கள் சந்தித்த வேளையில் தாகம் இதழில் பல செய்திகள் வெளியிட்டோம்.பெரியப் பத்திரிகைகள் ஐ.ஐ.டிக்கு எதிராக செய்தி வெளியிட மறுத்தன. வசந்தா அம்மாவை நான் கையோடு நக்கீரன் அலுவலகத்திற்கு அழைத்து வந்தேன்.அவர் இன்னல்களை கேட்ட அண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.உடன் முதன்மை துணையாசிரியர் லெனினை அழைத்தார்.தம்பி அம்மாவிடம் பேசுங்கள்.செய்தி வெளியிடுங்கள் ..என்றார்.வரும் வாரமே சென்னை ஐ.ஐ.டி யின் முகத்திரையை நக்கீரன் கிழித்தது.
அட்டையில் பேராசிரியர் வசந்தாவின் படம் வெளிவர அக்ரகார கும்பலே ஆடிப்போனது."கோபால் யார் மீது கை வைக்கிறீர்கள்" என்று பத்திரிகை உலக அம்பிகள் எகிர...இந்தத் தம்பிக்காக அண்ணன் செய்தியை வெளியிட்டார்.

வசந்தா அம்மாவுக்கு கல்பனா சாவ்லா விருது கிடைக்க நக்கீரன் செய்தியும் ஒரு காரணம்.

அண்ணனுக்கு புகை மது போன்றப் பழக்கங்கள் அறவே பிடிக்காது.ஷேவ் செய்யாமல் அவர் முன்னால் நின்றால் கூட அவருக்கு பிடிக்காது.

தாகம் இதழை நான் பெரிதாக வளர்க்கவில்லை என்பதில் அவருக்கு எப்போதும் ஆதங்கம்.

கர்நாடக வனத்துறையினர் 7 பேரை வீரப்பனிடமிருந்து அவர் மீட்டப்போது தாகம் இதழின் 7 ஆண்டு விழா சென்னை அண்ணா அரங்கத்தில் நடந்தது.அண்ணனுக்கும் பாராட்டு விழாவும் சேர்த்தே நடந்தது.

நடிகர்கள் விஜய் சூர்யா பங்கேற்ற அந்த விழா தாகம் சார்பில் அண்ணனுக்கு நடந்த பிரம்மாண்டப் பாராட்டு விழா.

அண்ணனுடனான அன்புகள் தொடரும்...தாகம் தணியாது...
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக