புதன், 5 டிசம்பர், 2012

சுபவீயை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த கலைஞர் !

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கலைஞரால் கைதுசெய்யப்பட்ட பேராசிரியர் சுபவீயை அந்த தலைவர் சைதாபேட்டை நீதிமன்றத்தில் காண வருகிறார் ! சுபவீயின் வலது கரமாக இருந்த வவுனீயனும் நானும் அந்த தலைவரை
வரவேற்க வாசலிலேய காத்திருந்தோம் . காரில் வருவார் என்று நாங்கள் நினைத்த தலைவர் வந்து இறங்கியது 23c பேருந்தில்! தன்னந் தனியாக வந்த அந்த தலைவர் ...தொல் .திருமாவளவன் ! சிறையில் சுபவீ ...அவர் மனைவியை வீட்டில் விசாரிக்க வருகிறார்கள் காவல் துறை அதிகாரிகள் .அந்த அப்பாவி அக்காவிடம் ஒரு அதிகாரி கேட்டார் ..."உங்கள் கணவர் LTTE யா ? " வசந்தா அக்கா சொன்னார் ..."நாங்கள் நாட்டு கோட்டை செட்டி "!!! துருவி துருவி விசாரிக்க வந்த அதிகாரிகள் விழுந்து விழுந்து சிரித்தனர் ! இன்னும் இன்னும் பல சம்பவங்கள் ...தணியாத தாகம் >>> தொடரில் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக