புதன், 5 டிசம்பர், 2012

தணியாத தாகம் !-1

தாகம் இதழ் 1992 ஆம் ஆண்டு அனைத்துக் கல்லூரி மாணவர் இதழாய் தொடங்கப்பட்டது .வரும் தமிழ் புத்தாண்டு தை திருநாளில் தாகம் 22 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது . நான் சந்தித்த தலைவர்கள் ,பத்திரிகையாளர்கள் ,மனித நேய பண்பாளர்கள் மற்றும் பல நிகழ்வுகளை தாகம் மற்றும் முகநூளில் "தணியாத தாகம் " எழுத உள்ளேன் நண்பர்களே .log on www .thaagam .com .முதல் தலைவர் வைகோ ! 1992 ஆம் ஆண்டு அவர் அண்ணாநகர் டவர் எதிரில் உள்ள ஒய் பிளாக் வீட்டில் வசித்து வந்தார் .இப்போது வைகோ இருப்பது எல் பிளாக் வீட்டில் . 1992 ஆம் ஆண்டு
வைகோ தி .மு .க. வில் இருந்து வெளியேற நிர்பந்தித்த ஆண்டு ."கருவின் குற்றம்" கவிதையை நாஞ்சிலார் எழுத, அவரை கட்சியை விட்டு நீக்கினார் கலைஞர் ! அது பற்றி தி .மு .க வினர் கருத்து கூற தயங்கிய நிலையில் வைகோ பகிரங்கமாக பொதுக்கூட்டத்தில் ,நாஞ்சிலாரின் நீக்கத்தை மறு பரிசீலனை செய்ய சொன்னார் ! தி .மு .க தலைமை மீது வைகோ போட்ட முதல் குண்டு இது ! தாகம் இதழுக்காக முதல் முறையாக 1992 ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் வைகோவின் இல்ல வரவேற்பறையில் காத்திருந்தோம் .....அது ஒரு முன்னிரவு நேரம் .அவர் வீட்டு மேல்தளத்திலிருந்து ஆங்கில பாடல் ஒலி நம் காதில் ஒலிக்கிறது ! அது அப்போதைய லயோலா கல்லூரி மாணவர் துரை வையாபுரியின் அறையில் இருந்து வந்துகொண்டு இருந்தது ! சமையல்காரர் எங்களுக்கு தேநீர் தர கதவை திறக்க உள்ளே வைகோ யாரிடமோ ஆக்ரோஷமாக பேசிக்கொண்டு இருந்தார் ! கதவை சமையல்காரர் சரியாக மூடாததால் வைகோவின் பேச்சு எங்களுக்கு தெளிவாக கேட்டது ! "எத்தனை நாளைக்கு நான் இந்த கொடுமையை அனுபவிப்பது ....ஒரு பூனையை ஒரு அறையில் பூட்டி விட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டு அதை பிடிக்க சென்றால் அது புலிபோல் நம் மீது பாய்ந்துவிடும் ! அந்த நிலையில் தான் நான் தி .மு .க .வில் இருக்கிறேன் ! என்னால் இனியும் பொறுக்கமுடியாது "! வைகோவின் இந்த எரிமலை வார்த்தைகளை கேட்ட நாங்கள் ஆடிப்போய்விட்டோம் ! சற்று நேரத்தில் புன்னகை ததும்ப வெளியே வந்து என் கைகளை பற்றி என்னை வரவேற்றார் வைகோ ! ....சந்திப்பு தொடரும் ....!-தாகம் செங்குட்டுவன்
Karthik Mukundan மற்றும் 16 பிறர் பேர்களுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக