வியாழன், 27 டிசம்பர், 2012
தணியாத தாகம் -2
மறுநாள் மியூசிக் அகாடெமியில் தாகம் இதழின் 4 ஆம் ஆண்டு விழா ! குன்னக்குடி கச்சேரி என்று அரங்கத்தில் பணம் கட்டி விட்டு புஷ்பவனம் மேடை ஏற போகிறார் .....அவாள் மேடையில் தமிழ் இசை ! குற்றாலீஸ்வரன் தந்தை செய்த குளறுபடியால் வைகோ வராத நிலையில் ஆனா ரூனா தலைமையில் நடிகர் ராஜேஷ் ,பொருளாதாரம் சுகுமார் ,தாகம் இதழின் நெறியாளர் கவிஞர் வல்லம் வேங்கடபதி ,விருது பெரும் குற்றாலீஸ்வரன் ,அமுதா பங்கேற்க விழா கலைக்கட்டியது . பார்வையாளர் போல் புஷ்பவனம் குப்புசாமியை உள்ளே அழைத்து வந்து மேடை ஏற்றினோம் . முதல் முறையாக அவர் தன் மனைவி அனிதாவுடன் மேடையேற அவர் கண்ணில் கண்ணீர் ! அகந்தையினாலே அழியாதே ,அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி என் நினைவில்வரும் -தமிழ் ஈழ மன்னே உன்னை ..மறப்பேனா நீ ஏன் அன்னை ! ,கிழவன் அல்ல அவன் கிழக்கு திசை , இன்னும் இன்னும் பல தமிழ் இசைக் கடலில் புஷ்பவனம் முத்தெடுக்க மியூசிக் அகாடமியின் மேடையும் ,சுவரும் .1800 இருக்கைகளும் இதுவரை தான் கேட்காத தமிழ் இசையை கேட்டு சொக்கிப்போனது ! ஆனால் ,மேடையில் ஒரு ஓரமாக ஒளிந்துக்கொண்டிருந்த என்னை ஒரு கரம் பற்றி இழுத்தது ! அது வேறு யாரும் இல்லை அரங்கத்தின் நிர்வாகி ! என்னை வலுகட்டாயமாக அவர் அலுவலகத்திற்குள் அழைத்து செல்ல ...எனக்கு வேர்த்துப்போனது ! "அடப்பாவி இந்த மேடை புனிதத்தையே கெடுத்துட்டியே ...நீ நல்லா இருப்பியா ? இதப்பார் ஒழுங்கா அந்த ஆள மேடைய விட்டு எறக்கிடு ...இல்ல நடப்பதே வேறு " என்று மிரட்ட ...உள்ளே 1000 பேர் நம்ம ஆட்கள் இருக்கும் தைரியத்தில் நான் ,"உன்னால் ஆனதை பார் .புஷ்பவவனத்தை இறக்க முடியாது " என்று சொல்லி விட்டு வந்தேன் .அரங்கத்துக்குள் புஷ்பவனம் தமிழ் இசை ஆலாபனையே நடத்தி கொண்டிருந்தார் .2 மணி நேரம் தமிழ் இசை பெய்து ஓய ,அடுத்தது குற்றாலீஸ்வரன் அமுதாவுக்கு பாராட்டு விழா . வந்திருந்த அனைவரும் பாராட்டிப் பேச குற்றாலீஸ்வரனும் அமுதாவும் ஏற்புரை நிகழ்த்தினர் . விழா இனிதே நிறைவுற என்னை கட்டி தழுவி பாராட்டினார் நந்தன் ஆசிரியர் ஆனா ரூனா . முறைத்துக்கொண்டு நின்றார் அரங்க நிர்வாகி ! நமக்கு இது விழா ..ஆனால் ,அவருக்கு இது மறக்க முடியாத நாள் .இன்று மியூசிக் அகாடெமியின் மேடைக்கு தீட்டு பட்டு விட்டது ! அன்று இரவு எத்தனை குடம் பெனாயில் ஊற்றி மேடையை கழுவினார்கள் என்று அவர்களுக்கு தான் தெரியும் ! பார்பனர்களின் கோட்டையில் முதல் முறையாக தாகம் ஒரு கருப்பு தமிழனை தமிழ் கொடி ஏற்ற வைத்தது .நம்மவர்கள் அதை இன்று மறந்திருப்பார்கள் .ஆனால் தாகத்தை இன்றளவும் அந்த அரங்கம் மறந்திருக்காது ! அடுத்த நாள் நான் அரங்க வைப்பு தொகையை திரும்பப் பெற அரங்கத்துள் நுழைந்தேன் ....அப்போது ....! -தாகம் தணியாது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக