வெள்ளி, 4 ஜனவரி, 2013
விடுதலைப்புலிகள் நடத்தும் பத்திரிகையின் ஆண்டு விழா ! தாகத்துக்கு பெருமை சேர்த்த தினமலர் !!!!(தணியாத தாகம் )
புஷ்பவனம் கச்சேரிக்கு மறுதினம் நான் மியூசிக் அகாடமி உள்ளே நுழைந்தேன் . வரவேற்ப்பு பலமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ! எது நடந்தாலும் கட்டிய வைப்புத்தொகையை வாங்கியாக வேண்டுமே .பலமணிநேர காத்திருப்புக்குப் பின் உள்ளே நுழைந்தேன் . ஒரு புழுவை பார்பதுபோல் "அவாள்கள்" என்னைப் பார்த்தார்கள் ! " எல்லாத்தையும் குழி தோண்டிப் பொதச்சுட்டு எதுக்கு வந்த " என்றார் நிர்வாகி என்னைப்பார்த்து ." சார் caution deposit refund வாங்க வந்தேன் " பவ்யமாக பதில் அளித்தேன் .அந்தப் பணம் வந்தால் தான் அடுத்த தாகம் வரும் !" ஒரு வாரம் கழித்து வா .கணக்குப் பார்க்கணும் " என்றார் நிர்வாகி . அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் " ஓய் பன்றதெல்லாம் பண்ணிட்டு அப்பாவி மாறி நிக்கற .மேடை புனிதத்தையே கெடுத்துட்டுயே . எதுக்கு இவனுக்கு எல்லாம் இடம் கொடுத்தீங்க " என்று கத்த அரமித்தார் ."போன வருஷம் (1993) இதே அரங்கத்தில் கங்கை அமரன் கச்சேரி நடத்தினோம் .நடிகை ரஞ்சிதா மேடை ஏறினார் .அப்போ உங்க மேடை புனிதம் கெடலியா " என்றேன் அமைதியாக (எகிறினா deposit போய்டுமே !). " பழைய கதையெல்லாம் பேசாதே . புஷ்பவனம் வந்தது தப்பில்லை .அவர் மேடையில் தமிழிசை பாடியது தான் தப்பு .இது கர்னாடக சபை .இங்கே தமிழ்ல பாடக்கூடாது " என்றார் காட்டமாக ! ( நீ என்ன கத்தினாலும் பாடியது பாடியதுதான் -மனசுக்குள் நினைத்துக்கொண்டேன் ) ."இவன் கிட்ட என்ன பேச்சு .நீ அடுத்த வாரம் வா " என்றார் நிர்வாகி திமிருடன் .பலமாதம் கழித்து பாதித் தொகையை தந்தார்கள் . புஷ்பவனத்தை அங்கு பாடவைத்து நமக்கு கிடைத்த வெற்றியை நினைத்து மனதை தேற்றிக்கொண்டேன் .
வைகோவை தவறவிட்டு விட்டோமே என்று மனம் தவித்துக்கொண்டே இருந்தது . ஆசிரியர் குழு நண்பர்கள் பிரேம்ராஜ் ,பிரகதீஸ்வரன் மற்றும் வெங்கடேஷ்," நாம் வைகோவை அடுத்த நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும் "என்று சொன்னார்கள் . 1996 பிப்ரவரி 4 .சென்னை ஜெர்மன் அரங்கில் தாகம் இதழின் 5 ஆம் ஆண்டு விழா . வைகோ ,சுபவீ ,நந்தன் அருணாசலம் ,இயக்குனர் மணிவண்ணன் அமர்ந்திருக்க அரங்கம் நிரம்பி வழிந்தது . முதலில் தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி .அடுத்து புஷ்பவனம் .அதன் பிறகு சிறப்பு விருந்தினர்கள் பேச்சு . முன் வரிசையில் கவிஞர் காசிஆனந்தன் அமர்ந்திருக்க ,அவர் எழுதிய " அழகான அந்தப் பனை மரம் ,அடிக்கடி நினைவில் வரும் .தமிழ் ஈழ மன்னே உன்னை ...மறப்பேனா நீ என் அன்னை " பாடலை தேனிசைப் பாட, வைகோ கண் கலங்கினார் . இசை நிகழ்ச்சி முடிந்துடன் மேடை ஏறிய வைகோ, "இன்று என்ன நாள் தெரியுமா ? இன்றுதான் எழுதும் தாள் (பேப்பர் ) கண்டுபிடிக்கப்பட்ட தினம் .சரியாகத்தான் தாகம் ஆண்டு விழா வைத்துள்ளீர்கள் ! என்று பேசினார் . விழா இனிதே நிறை உற்றது .குற்றாலீஸ்வரன் நிகழ்ச்சியில் கோட்டைவிட்டது இன்று நிறைவேறியது என்று வைகோவிடம் நான் சொல்ல ,அவரும் அதை அமோதித்தார் . ஆனால் ,அன்று இரவு வைகோவுக்கு மிகப்பெரிய சோகம் ! அவரின் தம்பிமார்களில் ஒருவரான ராயபுரம் சிவா படுகொலை செய்யப்பட்டார் ! ஏற்கனவே ஏழுமலை நாயக்கர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சிவா கொல்லப்பட்டது வைகோவையும் தொண்டர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது . மறுநாள் காலை அதுதான் தலைப்பு செய்தி ! விழாவுக்கு உறுதியாக வருவேன் என்று இரண்டு நாட்களுக்கு முன் என்னிடமும் தோழர் ஒ .சுந்தரத்திடமும் சொன்ன சிவா, ரத்த வெள்ளத்தில் மிதக்கும் படத்தைப்பார்த்து நானும் அதிர்ச்சி உற்றேன் . சிவா படுகொலை செய்தி முதல் பக்கத்தில் ....அடுத்தப்பக்கத்தில் தாகம் இதழின் 5 ஆம் ஆண்டு விழா செய்தியை பல பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டது .ஆனால், ஒரு பத்திரிகை மட்டும் " சென்னையில் விடுதலைப்புலிகள் நடத்தும் பத்திரிகையின் ஆண்டு விழா ! வைகோ பங்கேற்ப்பு !" என்று செய்தி வெளியிட்டது ! அது பொய் செய்தி என்றாலும் தாகத்துக்கு எப்பேர்பட்ட பெருமையை அந்த ப்பத்திரிகை சேர்த்துள்ளது என்று எனக்குள் நான் மகிழ்ந்தேன் ! அந்தப் புலானாய்வு பத்திரிகைவேறு யாரும் இல்லை .....தமிழர்களின் வீழ்ச்சியில் மகிழும் ,வெற்றியில் அவதூறு பரப்பும் ....உண்மை பேசும் நாளிதழ் .....தினமலர் ...!!!!(தணியாத தாகம் தொடரை படித்த வைகோ ,இன்று மும்பையில் இருந்து தொலைபேசி மூலம் தன் மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்துகொண்டார் .உடன் மல்லை சத்யாவும் இருந்தார் . சங்கொலியிலும் வெளியிடுவதாக கூறினார் ) ----தணியாத தாகம் தொடரும் ...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக