புதன், 5 டிசம்பர், 2012

புஷ்பவனத்தை மியூசிக் அகாடெமி உள்ளே விட மாட்டோம் ! அவாள்கள் போர்க்கொடி !

புஷ்பவனத்தை மியூசிக் அகாடெமி உள்ளே விட மாட்டோம் ! அவாள்கள் போர்க்கொடி !(தணியாத தாகம் ...தொடர் பகுதி -3)-தாகம் செங்குட்டுவன் . குற்றாலீஸ்வரனின் தந்தை இவ்வாறு கூறியவுடன் எனக்கு குழப்பம் .சுவரொட்டி ஒட்டியாகிவிட்டது .வைகோ பேராவலுடன் காத்திருக்கிறார் .ஆசிரியர் குழு நண்பர்கள் பிரேமும், பிரகாவும் "கூட்டம் வருவது வைகோவிற்கு தான் ,குற்றாலீஸ்வரனுக்கு இல்லை ,நாம் வைகோவை வைத்து நிகழ்ச்சி நடத்துவோம் .அவரிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம் .நமக்காக விமான சீடெல்லாம் எடுத்துவிட்டார் "என்றனர் . "வைகோ கலிங்கப்பட்டியில் இருந்து தாகம் நிகழ்ச்சிக்கு வருவதே குற்றாலீஸ்வரனை பாராட்டதான் ,மேடையில் அவன் இல்லையென்றால் அது நன்றாக இருக்காது .அவரிடமே உண்மையை சொல்லிவிடுவோம் "என்று நான் நண்பர்களை அழைத்துக்கொண்டு வைகோ வீட்டிற்கு கிளம்பினேன் . இதற்கிடையில் மியூசிக் அகாடமி நிர்வாகியிடம் இருந்து அழைப்பு ."என்ன செங்குட்டுவன் ,குன்னக்குடி வைத்தியநாதன் கச்சேரி என்று பணம் கட்டிவிட்டு ஊரெல்லாம் புஷ்பவனம் கச்சேரி என்று போஸ்டர் ஒட்டி இருக்கு .வைகோ வருவது பற்றி நோ அப்ஜெக்சன் ...புஷ்பவனம் குப்புசாமியை எல்லாம் உள்ளே விடமாட்டோம் .ஜாக்கிரதை !"நிர்வாகி அய்யர் எச்சரிக்க எனக்கு தலை சுற்றியது .1993 ஆம் வருடம் இதே மியூசிக் அகாடெமியில் தாகம் இதழின் 2 ஆண்டு விழா கங்கை அமரன் கச்சேரியில் கலைக்கட்டியது .இன்றைய நித்யானந்தா புகழ் ரஞ்சிதாவை அமைதிப்படை படப்பிடிப்பில் இருந்து இயக்குனர் மணிவண்ணன் அனுப்பி இருந்தார் .அதுபோன்ற சினிமா கூத்துக்கு மியூசிக் அகாடெமி அனுமதிக்கும் ஆனால் புஷ்பவனம் கச்சேரிக்கு அனுமதி இல்லையாம் .கோபத்தை அடக்கிக்கொண்டு வைகோ வீட்டிற்க்கு கிளம்பினோம் .இரவு 11 மணிக்கு வைகோ வந்தார் ."என்ன இந்நேரத்துக்கு தம்பி ,ஏதேனும் பிரச்சனையா ?" எப்படி அவரிடம் செய்தியை சொல்வது ....தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக