ஞாயிறு, 18 மே, 2014

மூன்றாண்டு சாதனைகள் பக்கம் பக்கமாக சிரிக்கின்றன நாளேடுகளில். விடப்பட்ட வேதனைகள் நிறைய....

சென்னையை அமெரிக்கா போல் மாற்றப் போவதாக முதல்வர் அறிவித்து இரண்டாண்டுகள் ஆகிறது .அமெரிக்கா வேண்டாம் குறைந்தப்பட்சம் சென்னை ஒரு சுகாதாரமான
நகரமாக மாறுமா என்பதே நம் கேள்வி. சென்னையின் மய்யப் பகுதிகளில் உள்ள சேரி மக்களை இரண்டாம் தர மக்களாகவே அனைத்து அரசுகளும் பார்கின்றன.மாநகராட்சி முற்றிலும் புறக்கணித்த பகுதிகள்தான் சேரி மக்கள், வாக்களிக்கும் ஒரு இயந்திரமாக , டாஸ்மாக் வாடிக்கையாளர்களாக , காவல்துறையின் வழக்கு எலிகளாக மட்டுமே பார்க்ப்படுகின்றனர்.கட்சி ரவுடிகளின் அராஜகம்...அரசின் அலட்சியம் என இம்மக்கள் அகதிகள் போல் தான் வாழ்கின்றனர்.இவர்களை உயர்த்தாமல் அரசின் சாதனைப் பட்டியல் என்பது சப்பைக்கட்டு.

பல ஆண்டுகளாக பதியாத எப்.ஐ.ஆர், மிகமிக மோசமான சாலைகள், எல்லை மீறும் சங்கிலிப் பறிப்பு, கொலை, கொள்ளை , நிறுத்தப்பட்டப் பால வேலைகளால் மக்களைப் பைத்தியமாக்கும் போக்குவரத்து நெரிசல், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, மின்வெட்டு பொய் வாக்குறுதிகள் என வேதனைப் பட்டியல்கள் நீள்கினறன... அடுத்தாண்டு சாதனைப் பட்டியலில் இவை சேருமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக