கடவுளுக்குத் தெரியுமா தாயுள்ளம் ?-அருண் ஷோரி.இந்த நூலைப் பற்றி முத்தரசன் மிக அழகாக இன்று புதுயுகத்தில் பேசினார். பத்திரிகையாளர் அருண்ஷோரி வெளி நாட்டில் இருந்த போது அவருக்கு ஆதித்யா என்ற மகன் பிறக்கிறான்.அவன் மூளை வளர்ச்சி அற்றக் குழந்தை. அவன் பிறக்கும் போது மருத்துவர்கள் செய்த தவறே குழந்தையின் இன் நிலைக்குக் காரணம் .ஆனால் அந்நாட்டு மருத்துவர்கள் ஆதித்யா வாழத்தகுதியற்றக் குழந்தை என்று சொன்ன போது ..அருண்ஷோரி இந்தியா வந்த விடுகிறார்.இந்திய கூட்டுக்குடும்ப முறையில் ஆதித்யாவைப் பார்த்துக்கொள்ளப் பல தேவதைகள் கிடைக்கிறார்கள்.ஒருமுறை அருண்ஷோரிக்கு வேலை போய்விடுகிறது .எல்லோரும் சோகத்தில் இருந்தப்போது ஆதித்யா கைத்தட்டி சிரிக்கிறான்.அதுவே சூழ்நிலையை மாற்றி அனைவரையும் சிரிக்க வைக்கிறது.இன்று ஆதித்யாவுக்கு 36 வயது.அருண்ஷோரி இந்தப் புத்தகத்தில் எங்கேயும் கடவுள் இருக்கிறார் இல்லை என்று சொல்லவில்லை.அப்படியே கடவுள் இருந்தாலும் அவருக்கு மனிதர்களின் பிரச்சனைகளைப் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு பக்குவமோ அறிவோ இல்லை என்று சொல்கிறார்.உனக்கான்ப் பிரச்சனைக்குத் தீர்வு உன்னிடம் உள்ளது.எதுவானாலும் நீதான் சந்திக்க வேண்டும். கடவுள் காப்பாற்ற மாட்டார் என்று அருண் ஷோரி முடிக்கிறார்.கடவுளுக்குத் தெரியுமா தாயுள்ளம் ?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக