களத்துமேட்டில்
கடலைக்காய்
காயவைக்கும்
போது
உன்
மடியில்
படுத்து
உறங்குவேன்
கண்ணய்யனை
எனக்கு
சுற்றிப்போடச்
சொல்வாய்
காலால் பிறந்த
பார்வதியை
குடலேற்றம்
எடுக்கச்சொல்வாய்
விளையாட்டில்
கண்ணடிப்பட்டால்
முலைப்பால்
பீய்ச்சச் சொல்வாய்
காராமணி
பறித்தவர்களுக்கு
எட்டணா
கொடுக்கச்சொல்வாய்
சகலகலாவல்லவன்
பார்க்க
நண்பர்களுக்கு சேர்ந்து
பத்து ரூபாய் தருவாய்
உன்
முந்தானை
எனக்கு ஏ.டி.எம்
முத்தம் பாஸ்வார்டு
பாரதிராஜா படத்து
காந்திமதி போல்
நீ ரவிக்கை அணியாத
பெரியம்மா
எத்தனைக்குடும்பப்
பஞ்சாயத்துகளை
திண்ணையிலேயே
தீர்த்து வைப்பாய்
இன்னைக்கு கூட
தவறி
விழப்
பார்த்தேன்
எங்கப் போன
என்
ரங்கநாயகி
ஆயா ?
சுத்திப்போட
ஏங்குறான்
பெரிய
பேரன் !
கடலைக்காய்
காயவைக்கும்
போது
உன்
மடியில்
படுத்து
உறங்குவேன்
கண்ணய்யனை
எனக்கு
சுற்றிப்போடச்
சொல்வாய்
காலால் பிறந்த
பார்வதியை
குடலேற்றம்
எடுக்கச்சொல்வாய்
விளையாட்டில்
கண்ணடிப்பட்டால்
முலைப்பால்
பீய்ச்சச் சொல்வாய்
காராமணி
பறித்தவர்களுக்கு
எட்டணா
கொடுக்கச்சொல்வாய்
சகலகலாவல்லவன்
பார்க்க
நண்பர்களுக்கு சேர்ந்து
பத்து ரூபாய் தருவாய்
உன்
முந்தானை
எனக்கு ஏ.டி.எம்
முத்தம் பாஸ்வார்டு
பாரதிராஜா படத்து
காந்திமதி போல்
நீ ரவிக்கை அணியாத
பெரியம்மா
எத்தனைக்குடும்பப்
பஞ்சாயத்துகளை
திண்ணையிலேயே
தீர்த்து வைப்பாய்
இன்னைக்கு கூட
தவறி
விழப்
பார்த்தேன்
எங்கப் போன
என்
ரங்கநாயகி
ஆயா ?
சுத்திப்போட
ஏங்குறான்
பெரிய
பேரன் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக