சனி, 7 ஜூன், 2014

இந்திய வல்லரசின்
மானம் காற்றில்
பறக்கிறது

இந்து மதத்தின்
பெருமை கயிற்றில்
தொங்குகிறது

ஐந்து கணவர்
பாஞ்சாலியை காக்க
கண்ணன்

நாதி இல்லா
சாதிக்கு இல்லை
கொம்பன்

நீதி மன்றங்களே
மரண தண்டனைக்கு
அஞ்சுகிறது

மனு நீதி
மரத்திலேயே தீர்ப்பு
எழுதுகிறது

கை பட்டால்
கால் பட்டால்
தீட்டு

படுக்கைக்கு மட்டுமில்லை
உயர் சாதிப்
பூட்டு

கங்கையும் யமுனையும்
கயிற்றில் தொங்கும்
காட்சி

பெரும்பான்மை அரசில்
சிறுபான்மை அழியும்
சாட்சி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக