ஞாயிறு, 11 மே, 2014

ஐம்புலன்களை ஆளும் ஆறாம் புலன்... கைப்பேசி !

வெள்ளி, 4 ஜனவரி, 2013

இப்படியும் ஒரு தலைவர் ! (தணியாத தாகம் )

சென்னை ஐ .ஐ .டி .கணித மேதை, பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களை வைகோவிடம் அறிமுகப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு . தாயகத்தில் அவர்களை அறிமுகப்படுத்தியபோது அந்த ஆண்டு மகளிர் தினத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடுத்துவதாக கூறினார் .சொன்னபடியே செய்துக் காட்டினார் . பேராசிரியரை அழைத்து சென்ற தினத்தில் தாயகத்தில் ஒரு வினோத காட்சியை கண்டேன் . அன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அங்கு வைகோ முன் அமர்ந்திருந்தனர் .ஒவ்வொரு தம்பியை அழைக்கும் வைகோ அவரிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் .உதவிக்கேட்டு வரும் தம்பியின் கோப்பை சரி பார்த்தப்பின் அந்தத் தம்பியின் முன்னிலையிலே தொலைபேசி எண்ணை சுழற்றுகிறார் ...sir iam vaiko here .A humble request . one of my close candidate has applied job in your concern .pls consider his application .இப்படி அன்று மட்டும் பல படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் ! இப்படி ஒருக் காட்சியை நான் என் வாழ்நாளில் எந்தக்கட்சி அலுவலகத்திலும் கண்டதில்லை ! எத்தனையோ நேர்காணல்களை அவரிடம் எடுத்துள்ளேன் . இந்த மனிதரின் வேகம் ,பேச்சு ,கட்டுப்பாடு ,துணிவு என்போன்ற இளைஞர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை . அவர் முதல் நடைபயணம் சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி சாலையில் நிறை உற்றபோது அவருடன் நடந்து செல்லும் அறிய வாய்ப்பினைப் பெற்றேன் .தொண்டர் அணியுடன் முன்னே நடந்து சென்றவர் பயணத்தை நிறைவு செய்யும் நேரத்தில் சட்டென திரும்பி பார்த்து, வேகமாக பின்னோக்கி நடந்த வந்தார் .நடைபயணத்தில் நடந்து வந்த தம்பி, தான் வைத்திருந்த கொடிக்கம்பில் லேசாக அங்கு நின்றிருந்த காவல்துறை வாகனத்தில் தட்டி விட்டார் .கோபமுற்ற வைகோ விரைந்து சென்று அந்தத் தம்பியின் கைகளில் இருந்த ம.தி .மு ,க .கொடியை பிடுங்கிக்கொண்டு ." தயவு செய்து நீ ஊருக்கு கிளம்பு .கட்டுப்பாடு இல்லாதவன் என் கட்சிக்கு வேண்டாம் " என்று சொல்லி அனுப்பி விட்டார் . அன்றைய நடைபயணம் தொடங்கி இன்றைய மதுவிலக்கு பயணம் வரை அவர் சாதித்த சாதனைகள் ஏராளம் .இருந்தும் வைகோ ஏன் முதல்வர் வேட்பாளராக வரவில்லை என்று நடுநிலையாளர்களுக்கு கவலை உண்டு . கூட்டணி அரசியலில் ஒவ்வொரு முறையும் பல்லக்கு ஏறும் தலைவர்கள் மத்தியில் இவர் பல்லக்கு தூக்கும் தலைவராக மாறிவிடுகிறார் . வைகோவுக்கு நான் வைக்கும் ஒரே வேண்டுகோள், தயவுசெய்து இனி மற்றக் கழகங்களுடன் கூட்டணி வைக்காதீர்கள் .மூன்றாவது அணிக்கு நீங்கள் தலைவராகுங்கள் ! ஓட்டு அரசியல் பற்றி கவலைப்படாதீர்கள் .கட்சியை நம்பி நீங்கள் இல்லை .உங்களை நம்பித்தான் கட்சி ! மாற்று தலைவராக உங்களை மக்கள் எப்போதோ தேர்ந்தெடுத்திருப்பார்கள் ....நீங்கள் தான் கட்சியைக்காப்பாற்ற கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் கூட்டணி அமைத்தீர்கள் . உங்களை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் .உங்களையே நம்பி இருக்கும் தொண்டர்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகிறார்கள் . மாற்று தலைவராக உங்களை மக்கள் ஏற்க தயார் ....மீண்டும் அவர்களுடன் கூட்டணி அமைத்து உங்கள் நம்பக தன்மையை இழந்துவிடாதீர்கள் . காலம் உங்களை அங்கீகரித்தே தீரும் . " என் பயணம் முட்கள் நிறைந்தது .துன்பம் அனுபவிப்பவரே என்னுடன் வரலாம் .சுகம் தேடுவோர் வர வேண்டாம் " ம .தி .மு .க .தொடங்கியப்போது நீங்கள் சொன்னது .சுகம் தேடியவர்கள் உங்களுடன் இல்லை .மற்றவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் ? இது வரை வைகோ உடன் எனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டேன் . அடுத்தத் தலைவர் ......கலைஞர்!! -தணியாத தாகம் தொடரும் சென்னை ஐ .ஐ .டி .கணித மேதை, பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களை வைகோவிடம் அறிமுகப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு . தாயகத்தில் அவர்களை அறிமுகப்படுத்தியபோது அந்த ஆண்டு மகளிர் தினத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடுத்துவதாக கூறினார் .சொன்னபடியே செய்துக் காட்டினார் . பேராசிரியரை அழைத்து சென்ற தினத்தில் தாயகத்தில் ஒரு வினோத காட்சியை கண்டேன் . அன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அங்கு வைகோ முன் அமர்ந்திருந்தனர் .ஒவ்வொரு தம்பியை அழைக்கும் வைகோ அவரிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் .உதவிக்கேட்டு வரும் தம்பியின் கோப்பை சரி பார்த்தப்பின் அந்தத் தம்பியின் முன்னிலையிலே தொலைபேசி எண்ணை சுழற்றுகிறார் ...sir iam vaiko here .A humble request . one of my close candidate has applied job in your concern .pls consider his application .இப்படி அன்று மட்டும் பல படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்தார் ! இப்படி ஒருக் காட்சியை நான் என் வாழ்நாளில் எந்தக்கட்சி அலுவலகத்திலும் கண்டதில்லை ! எத்தனையோ நேர்காணல்களை அவரிடம் எடுத்துள்ளேன் . இந்த மனிதரின் வேகம் ,பேச்சு ,கட்டுப்பாடு ,துணிவு என்போன்ற இளைஞர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை . அவர் முதல் நடைபயணம் சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி சாலையில் நிறை உற்றபோது அவருடன் நடந்து செல்லும் அறிய வாய்ப்பினைப் பெற்றேன் .தொண்டர் அணியுடன் முன்னே நடந்து சென்றவர் பயணத்தை நிறைவு செய்யும் நேரத்தில் சட்டென திரும்பி பார்த்து, வேகமாக பின்னோக்கி நடந்த வந்தார் .நடைபயணத்தில் நடந்து வந்த தம்பி, தான் வைத்திருந்த கொடிக்கம்பில் லேசாக அங்கு நின்றிருந்த காவல்துறை வாகனத்தில் தட்டி விட்டார் .கோபமுற்ற வைகோ விரைந்து சென்று அந்தத் தம்பியின் கைகளில் இருந்த ம.தி .மு ,க .கொடியை பிடுங்கிக்கொண்டு ." தயவு செய்து நீ ஊருக்கு கிளம்பு .கட்டுப்பாடு இல்லாதவன் என் கட்சிக்கு வேண்டாம் " என்று சொல்லி அனுப்பி விட்டார் . அன்றைய நடைபயணம் தொடங்கி இன்றைய மதுவிலக்கு பயணம் வரை அவர் சாதித்த சாதனைகள் ஏராளம் .இருந்தும் வைகோ ஏன் முதல்வர் வேட்பாளராக வரவில்லை என்று நடுநிலையாளர்களுக்கு கவலை உண்டு . கூட்டணி அரசியலில் ஒவ்வொரு முறையும் பல்லக்கு ஏறும் தலைவர்கள் மத்தியில் இவர் பல்லக்கு தூக்கும் தலைவராக மாறிவிடுகிறார் . வைகோவுக்கு நான் வைக்கும் ஒரே வேண்டுகோள், தயவுசெய்து இனி மற்றக் கழகங்களுடன் கூட்டணி வைக்காதீர்கள் .மூன்றாவது அணிக்கு நீங்கள் தலைவராகுங்கள் ! ஓட்டு அரசியல் பற்றி கவலைப்படாதீர்கள் .கட்சியை நம்பி நீங்கள் இல்லை .உங்களை நம்பித்தான் கட்சி ! மாற்று தலைவராக உங்களை மக்கள் எப்போதோ தேர்ந்தெடுத்திருப்பார்கள் ....நீங்கள் தான் கட்சியைக்காப்பாற்ற கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் கூட்டணி அமைத்தீர்கள் . உங்களை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் .உங்களையே நம்பி இருக்கும் தொண்டர்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகிறார்கள் . மாற்று தலைவராக உங்களை மக்கள் ஏற்க தயார் ....மீண்டும் அவர்களுடன் கூட்டணி அமைத்து உங்கள் நம்பக தன்மையை இழந்துவிடாதீர்கள் . காலம் உங்களை அங்கீகரித்தே தீரும் . " என் பயணம் முட்கள் நிறைந்தது .துன்பம் அனுபவிப்பவரே என்னுடன் வரலாம் .சுகம் தேடுவோர் வர வேண்டாம் " ம .தி .மு .க .தொடங்கியப்போது நீங்கள் சொன்னது .சுகம் தேடியவர்கள் உங்களுடன் இல்லை .மற்றவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் ? இது வரை வைகோ உடன் எனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டேன் . அடுத்தத் தலைவர் ......கலைஞர்!! -தணியாத தாகம் தொடரும்

விடுதலைப்புலிகள் நடத்தும் பத்திரிகையின் ஆண்டு விழா ! தாகத்துக்கு பெருமை சேர்த்த தினமலர் !!!!(தணியாத தாகம் )

புஷ்பவனம் கச்சேரிக்கு மறுதினம் நான் மியூசிக் அகாடமி உள்ளே நுழைந்தேன் . வரவேற்ப்பு பலமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ! எது நடந்தாலும் கட்டிய வைப்புத்தொகையை வாங்கியாக வேண்டுமே .பலமணிநேர காத்திருப்புக்குப் பின் உள்ளே நுழைந்தேன் . ஒரு புழுவை பார்பதுபோல் "அவாள்கள்" என்னைப் பார்த்தார்கள் ! " எல்லாத்தையும் குழி தோண்டிப் பொதச்சுட்டு எதுக்கு வந்த " என்றார் நிர்வாகி என்னைப்பார்த்து ." சார் caution deposit refund வாங்க வந்தேன் " பவ்யமாக பதில் அளித்தேன் .அந்தப் பணம் வந்தால் தான் அடுத்த தாகம் வரும் !" ஒரு வாரம் கழித்து வா .கணக்குப் பார்க்கணும் " என்றார் நிர்வாகி . அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் " ஓய் பன்றதெல்லாம் பண்ணிட்டு அப்பாவி மாறி நிக்கற .மேடை புனிதத்தையே கெடுத்துட்டுயே . எதுக்கு இவனுக்கு எல்லாம் இடம் கொடுத்தீங்க " என்று கத்த அரமித்தார் ."போன வருஷம் (1993) இதே அரங்கத்தில் கங்கை அமரன் கச்சேரி நடத்தினோம் .நடிகை ரஞ்சிதா மேடை ஏறினார் .அப்போ உங்க மேடை புனிதம் கெடலியா " என்றேன் அமைதியாக (எகிறினா deposit போய்டுமே !). " பழைய கதையெல்லாம் பேசாதே . புஷ்பவனம் வந்தது தப்பில்லை .அவர் மேடையில் தமிழிசை பாடியது தான் தப்பு .இது கர்னாடக சபை .இங்கே தமிழ்ல பாடக்கூடாது " என்றார் காட்டமாக ! ( நீ என்ன கத்தினாலும் பாடியது பாடியதுதான் -மனசுக்குள் நினைத்துக்கொண்டேன் ) ."இவன் கிட்ட என்ன பேச்சு .நீ அடுத்த வாரம் வா " என்றார் நிர்வாகி திமிருடன் .பலமாதம் கழித்து பாதித் தொகையை தந்தார்கள் . புஷ்பவனத்தை அங்கு பாடவைத்து நமக்கு கிடைத்த வெற்றியை நினைத்து மனதை தேற்றிக்கொண்டேன் . வைகோவை தவறவிட்டு விட்டோமே என்று மனம் தவித்துக்கொண்டே இருந்தது . ஆசிரியர் குழு நண்பர்கள் பிரேம்ராஜ் ,பிரகதீஸ்வரன் மற்றும் வெங்கடேஷ்," நாம் வைகோவை அடுத்த நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும் "என்று சொன்னார்கள் . 1996 பிப்ரவரி 4 .சென்னை ஜெர்மன் அரங்கில் தாகம் இதழின் 5 ஆம் ஆண்டு விழா . வைகோ ,சுபவீ ,நந்தன் அருணாசலம் ,இயக்குனர் மணிவண்ணன் அமர்ந்திருக்க அரங்கம் நிரம்பி வழிந்தது . முதலில் தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி .அடுத்து புஷ்பவனம் .அதன் பிறகு சிறப்பு விருந்தினர்கள் பேச்சு . முன் வரிசையில் கவிஞர் காசிஆனந்தன் அமர்ந்திருக்க ,அவர் எழுதிய " அழகான அந்தப் பனை மரம் ,அடிக்கடி நினைவில் வரும் .தமிழ் ஈழ மன்னே உன்னை ...மறப்பேனா நீ என் அன்னை " பாடலை தேனிசைப் பாட, வைகோ கண் கலங்கினார் . இசை நிகழ்ச்சி முடிந்துடன் மேடை ஏறிய வைகோ, "இன்று என்ன நாள் தெரியுமா ? இன்றுதான் எழுதும் தாள் (பேப்பர் ) கண்டுபிடிக்கப்பட்ட தினம் .சரியாகத்தான் தாகம் ஆண்டு விழா வைத்துள்ளீர்கள் ! என்று பேசினார் . விழா இனிதே நிறை உற்றது .குற்றாலீஸ்வரன் நிகழ்ச்சியில் கோட்டைவிட்டது இன்று நிறைவேறியது என்று வைகோவிடம் நான் சொல்ல ,அவரும் அதை அமோதித்தார் . ஆனால் ,அன்று இரவு வைகோவுக்கு மிகப்பெரிய சோகம் ! அவரின் தம்பிமார்களில் ஒருவரான ராயபுரம் சிவா படுகொலை செய்யப்பட்டார் ! ஏற்கனவே ஏழுமலை நாயக்கர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சிவா கொல்லப்பட்டது வைகோவையும் தொண்டர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது . மறுநாள் காலை அதுதான் தலைப்பு செய்தி ! விழாவுக்கு உறுதியாக வருவேன் என்று இரண்டு நாட்களுக்கு முன் என்னிடமும் தோழர் ஒ .சுந்தரத்திடமும் சொன்ன சிவா, ரத்த வெள்ளத்தில் மிதக்கும் படத்தைப்பார்த்து நானும் அதிர்ச்சி உற்றேன் . சிவா படுகொலை செய்தி முதல் பக்கத்தில் ....அடுத்தப்பக்கத்தில் தாகம் இதழின் 5 ஆம் ஆண்டு விழா செய்தியை பல பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டது .ஆனால், ஒரு பத்திரிகை மட்டும் " சென்னையில் விடுதலைப்புலிகள் நடத்தும் பத்திரிகையின் ஆண்டு விழா ! வைகோ பங்கேற்ப்பு !" என்று செய்தி வெளியிட்டது ! அது பொய் செய்தி என்றாலும் தாகத்துக்கு எப்பேர்பட்ட பெருமையை அந்த ப்பத்திரிகை சேர்த்துள்ளது என்று எனக்குள் நான் மகிழ்ந்தேன் ! அந்தப் புலானாய்வு பத்திரிகைவேறு யாரும் இல்லை .....தமிழர்களின் வீழ்ச்சியில் மகிழும் ,வெற்றியில் அவதூறு பரப்பும் ....உண்மை பேசும் நாளிதழ் .....தினமலர் ...!!!!(தணியாத தாகம் தொடரை படித்த வைகோ ,இன்று மும்பையில் இருந்து தொலைபேசி மூலம் தன் மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்துகொண்டார் .உடன் மல்லை சத்யாவும் இருந்தார் . சங்கொலியிலும் வெளியிடுவதாக கூறினார் ) ----தணியாத தாகம் தொடரும் ...

வியாழன், 27 டிசம்பர், 2012

தணியாத தாகம் -2

மறுநாள் மியூசிக் அகாடெமியில் தாகம் இதழின் 4 ஆம் ஆண்டு விழா ! குன்னக்குடி கச்சேரி என்று அரங்கத்தில் பணம் கட்டி விட்டு புஷ்பவனம் மேடை ஏற போகிறார் .....அவாள் மேடையில் தமிழ் இசை ! குற்றாலீஸ்வரன் தந்தை செய்த குளறுபடியால் வைகோ வராத நிலையில் ஆனா ரூனா தலைமையில் நடிகர் ராஜேஷ் ,பொருளாதாரம் சுகுமார் ,தாகம் இதழின் நெறியாளர் கவிஞர் வல்லம் வேங்கடபதி ,விருது பெரும் குற்றாலீஸ்வரன் ,அமுதா பங்கேற்க விழா கலைக்கட்டியது . பார்வையாளர் போல் புஷ்பவனம் குப்புசாமியை உள்ளே அழைத்து வந்து மேடை ஏற்றினோம் . முதல் முறையாக அவர் தன் மனைவி அனிதாவுடன் மேடையேற அவர் கண்ணில் கண்ணீர் ! அகந்தையினாலே அழியாதே ,அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி என் நினைவில்வரும் -தமிழ் ஈழ மன்னே உன்னை ..மறப்பேனா நீ ஏன் அன்னை ! ,கிழவன் அல்ல அவன் கிழக்கு திசை , இன்னும் இன்னும் பல தமிழ் இசைக் கடலில் புஷ்பவனம் முத்தெடுக்க மியூசிக் அகாடமியின் மேடையும் ,சுவரும் .1800 இருக்கைகளும் இதுவரை தான் கேட்காத தமிழ் இசையை கேட்டு சொக்கிப்போனது ! ஆனால் ,மேடையில் ஒரு ஓரமாக ஒளிந்துக்கொண்டிருந்த என்னை ஒரு கரம் பற்றி இழுத்தது ! அது வேறு யாரும் இல்லை அரங்கத்தின் நிர்வாகி ! என்னை வலுகட்டாயமாக அவர் அலுவலகத்திற்குள் அழைத்து செல்ல ...எனக்கு வேர்த்துப்போனது ! "அடப்பாவி இந்த மேடை புனிதத்தையே கெடுத்துட்டியே ...நீ நல்லா இருப்பியா ? இதப்பார் ஒழுங்கா அந்த ஆள மேடைய விட்டு எறக்கிடு ...இல்ல நடப்பதே வேறு " என்று மிரட்ட ...உள்ளே 1000 பேர் நம்ம ஆட்கள் இருக்கும் தைரியத்தில் நான் ,"உன்னால் ஆனதை பார் .புஷ்பவவனத்தை இறக்க முடியாது " என்று சொல்லி விட்டு வந்தேன் .அரங்கத்துக்குள் புஷ்பவனம் தமிழ் இசை ஆலாபனையே நடத்தி கொண்டிருந்தார் .2 மணி நேரம் தமிழ் இசை பெய்து ஓய ,அடுத்தது குற்றாலீஸ்வரன் அமுதாவுக்கு பாராட்டு விழா . வந்திருந்த அனைவரும் பாராட்டிப் பேச குற்றாலீஸ்வரனும் அமுதாவும் ஏற்புரை நிகழ்த்தினர் . விழா இனிதே நிறைவுற என்னை கட்டி தழுவி பாராட்டினார் நந்தன் ஆசிரியர் ஆனா ரூனா . முறைத்துக்கொண்டு நின்றார் அரங்க நிர்வாகி ! நமக்கு இது விழா ..ஆனால் ,அவருக்கு இது மறக்க முடியாத நாள் .இன்று மியூசிக் அகாடெமியின் மேடைக்கு தீட்டு பட்டு விட்டது ! அன்று இரவு எத்தனை குடம் பெனாயில் ஊற்றி மேடையை கழுவினார்கள் என்று அவர்களுக்கு தான் தெரியும் ! பார்பனர்களின் கோட்டையில் முதல் முறையாக தாகம் ஒரு கருப்பு தமிழனை தமிழ் கொடி ஏற்ற வைத்தது .நம்மவர்கள் அதை இன்று மறந்திருப்பார்கள் .ஆனால் தாகத்தை இன்றளவும் அந்த அரங்கம் மறந்திருக்காது ! அடுத்த நாள் நான் அரங்க வைப்பு தொகையை திரும்பப் பெற அரங்கத்துள் நுழைந்தேன் ....அப்போது ....! -தாகம் தணியாது

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

."சத்தியம்" மௌன்ட்ரோட்ல தியட்ரா மாறிடிச்சு ...அங்கு" தர்மம்" பணமா கொட்டுது !

என் நண்பர் ஒருவர் சென்னை அசோக்நகரில் வீடு கட்ட முடிவு செய்தார் .அவர் இடத்தின் முன் ஒரு மரம் பல ஆண்டுகளாக வளர்ந்து நிற்கிறது .அம்மரத்தின் வேர்கள் அவர் இடம் முழுதும் பாய்ந்து இருக்கிறது .நண்பர் நேர்மையானவர் ,சட்டத்தை மதிப்பவர் . இந்த மரத்தை அப்புறப்படுத்த 132 வது வட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளருக்கு மனு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது . மரத்தை அகற்றுவதற்கான கட்டணமும் செலுத்த தயாராக இருக்கிறார் . இது வரை அவருக்கு பதிலே இல்லை . கவுன்சிலருக்கு கட்டிங் கொடுத்தால் முடிந்து விடும் என்று அவருக்கு அறிவுரை சொல்லியும், அவர் எல்லாம் சட்டப்படியாக தான் செய்வேன் என்று அடம்பிடிக்கிறார் . சத்யம் திரையரங்கம் வழியாக வந்தபோது இந்தக்காட்சியை பார்த்தேன் . பல ஆண்டுகாலமாக சாலையில் நிழல் தந்த மரம் சத்யம் திரையரங்கின் சுற்றுச்சுவரை பாதித்துவிடும் ,திரைஅரங்கம் முன் வைக்கப்படும் பட விளம்பரங்களை மறைத்துவிடும் என்ற காரணத்திற்க்காக வெட்டி வீழ்த்தப்பட்டது ! என் அப்பாவி அசோக்நகர் நண்பனை மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் ! மாநகராட்சி போடும் எந்த சட்டமும் பணக்காரனுக்கு அல்ல ...ஏழைக்குதான் ! பல ஆண்டுகள் முன்பு இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய ஜல்லிக்கட்டு படத்தின் வசனம் நினைவுக்கு வந்தது ...."சத்தியம்" மௌன்ட்ரோட்ல தியட்ரா மாறிடிச்சு ...அங்கு" தர்மம்" பணமா கொட்டுது ! என்று எழுதி இருப்பார் ! அம்மா ஆண்டாலும் அய்யா ஆண்டாலும் ஆட்சி மாறுமே தவிர காட்சி மாறாது !!

புதன், 19 டிசம்பர், 2012

thaagamsenguttuvan: என்ன தண்டனை தரப்போகிறோம் ?!

thaagamsenguttuvan: என்ன தண்டனை தரப்போகிறோம் ?!: மாதம் 600 ரூபாய் போதும் ....இந்தியக் குடும்பம் வயிறார சாப்பிட ! சொன்னவர் டெல்லி காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சத் . அம்மணி தலையில் ஏதேனும் க...

என்ன தண்டனை தரப்போகிறோம் ?!

மாதம் 600 ரூபாய் போதும் ....இந்தியக் குடும்பம் வயிறார சாப்பிட ! சொன்னவர் டெல்லி காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சத் . அம்மணி தலையில் ஏதேனும் காயம் பட்டதால் "நடுவுல கொஞ்சம் பக்கத்த "காணலை போலிருக்கிறது ! இந்த அம்மையார் ஆளும் மாநிலத்தில் மக்கள் 600 ரூபாயில் குடும்பம் நடத்தினாலும் நடத்தலாம் ...ஆனால் எந்தக் குடும்பத்து பெண்ணிற்கும் கற்பு பாதுகாப்பு மட்டும் கிடைக்கவே கிடைக்காது ! இந்தியாவிலயே பெண்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லாத மாநிலம் வல்லரசு (!) இந்தியாவின் தலைநகரம் . ஒருவேளை ராஜபக்சேவின் ஆட்களை ,தமிழ் பெண்களை சூறை யாடியதுபோதும் டெல்லி பெண்களையும் ஒரு கை பார்க்கும் பயிற்சியை காங்கிரஸ் கேட்டு பெற்றிருக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியில் ,அதுவும் ஒரு பெண் முதல்வர் ஆட்சியில் . இருநாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த கற்பழிப்பு கொடூரம் உலகில் எங்காவது நடைப்பெற்றிருக்குமா எனபது கேள்விக்குறியே ! ஒரு பள்ளிப்பேருந்தில் குடித்துவிட்டு கும்மாளம் போட்டு வந்த ஆறு பேர் ,பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஒரு கல்லூரி மனைவியையும் அவர் காதலனையும் பார்த்து நிற்க ,அவர்களும் தங்களை போகும் வழியில் இறக்கி விட முடியுமா ?என்று கேட்க . அந்த காதல் கிளிகளை சுமந்து செல்கிறது அந்தப் பருந்து ! இரும்புத் தடியில் தாக்கப்படுகிறான் காதலன் !ஒருவர் மாறி ஒருவர் பேருந்தை ஓட்ட ....ஒருவர் மாறி ஒருவர் அந்த கல்லூரி மனைவியை சிதைத்து சின்னா பின்னம்மாக்குகின்றனர் ! இந்தக்கொடூரம் நடைபெறும் இரண்டு மணி நேரத்திற்கும் பேருந்து தலைநகரை வலம் வந்தபடியே இருக்கிறது .கறுப்புக் கண்ணாடியால் மூடப்பட்ட பேருந்தில் கதறும் அப்பெண்ணின் குரல் வெளியே கேட்கவில்லை . ஆறு மிருகங்களால் அடித்து துவைக்கப்பட்ட அப்பெண்ணும் அவன் காதலனும் ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர் ! இந்தக்கொடுமை நேற்று மக்களவையில் புயலைக்கிளப்ப ..வழக்கம் போல் சூடு சுரணை இன்றி கிடந்தது காங்கிரஸ் கட்சி . ஆறு பேரில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை தூக்கில் போடவேண்டும் என்று பலர் கோரிக்கை வைக்கின்றனர் . இந்நேரம் மருத்துவமனையில் பலியாகிவிட்டாளோ என்று கருதப்படும் அந்தத் தோழி இழந்ததை அவர்களை தூக்கில் போடுவதால் மீண்டும் தருவார்களா ? தூக்கு... தண்டனை இல்லை ...அது விடுதலை எனபது பலருக்கு புரிவது இல்லை .அவர்களை தண்டிப்பதற்கு முன் ..தலை நகரை கற்பழிப்பு நகரமாக மாற்றிய ஷீலா தீட்ஷத்துக்கும் ....காங்கிரஸ் தலைமைக்கும் நாம் என்ன தண்டனை தரப்போகிறோம் ?!